ராசா
நீரா ராடியா
கனிமொழி
பர்கா தத்
வீர் சங்வி
மற்றும் பல முக்கிய தலைகள்...
இப்படியும் கூட நடக்குமா என்பது போன்ற நிகழ்சிகள் நடந்து கொண்டிருக்கிறது நம் நாட்டில்.. 2G ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கியதில் ஊழல் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவ்வப்போது செய்திகள் அடிபட்டு வந்தாலும் இப்போதுதான் எல்லாரும் கேள்வி கேக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஒரு தமிழன் ஆரம்பித்த ஊழலை அடங்கியிருந்த சமயம் திரும்ப பிரச்சினை பூதாகரமாக வெடிக்க இன்னொரு தமிழனே அதுவும் அரசியலில் கோமாளி எனப்பட்ட சு.சாமி இருந்ததில் நாம் கொஞ்சமாவது பெருமை பட்டுக்கொள்ளலாம்.
நீர ராடியா எனும் அரசியலில் இல்லாத அரசியல் மற்றும் பெரும் புள்ளிகளின் செல்வாக்கு பெற்றவரிடம் நம் முன்னாள் அமைச்சர் ராஜா,கனிமொழி, என்டிடிவி புகழ் பர்கா தத் மற்றும் இன்னொரு பத்திரிக்கையாளர் விர் சிங்வி என்பவும் பேசிய உரையாடல் open magazine எனும் இரண்டு வயதே நிரம்பிய பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. வருமான ஏய்ப்பு விவகாரத்தில் நீர ராடியவின் மேல் சந்தேக கண்கொண்டு போன் கால்களை ரெகார்ட் செய்யும் போதுதான் இவையெல்லாம் வெளிவந்ததாக அப்பத்திரிக்கை கூறுகிறது.
இவை இவ்வளவு நடந்தும் நம்மூர் பத்திரிக்கைகள் எதுவும் கண்டுகொள்ளவே இல்லை என வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது தான் தினமணி பத்திரிக்கை இந்த செய்திகளை இன்று வெளியிட்டுள்ளது. வேறு எந்த தமிழக பத்திரிக்கைக்கும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை.
இதில் நம் மக்களை வருத்த படவைக்கும் சில விஷயங்கள்:
- நம் நாட்டில் மந்திரிகளை ஆட்டுவிப்பது நீரா ராடியா மற்றும் பணமுதலைகளும், தொழிலதிபர்களும் தான்.
- நாட்டின் முதுகெலும்பு என போற்றப்படும் பத்திரிகை துறையே இதற்கு துணை எனும்போது.
- பர்கா தத் போன்றோரின் கார்கில் துணிச்சளெல்லாம் விளம்பரத்திற்கும் ஆதாயங்களுக்கும் தானா?
- NDTV,IBN,Headlines today மற்றும் பிற செய்தி சேனல்களில் இதை பற்றிய செய்திகளே இல்லையே? இது எதை காட்டுகிறது?
- Twitter,FB போன்றவற்றில் நான் follow செய்யும் பிரபலங்கள்(Celebs) எவரும் இதை பற்றி வருத்தப்பட்டது போல தெரியவில்லை.
சில சந்தோசங்கள்:
- எப்படியோ Open Magazine,Outlook India போன்ற தளங்களின் மூலம் அனைத்து மக்களுக்கும் செய்தி பொய் சேர்ந்துள்ளது.- தினமணி போன்ற பத்திரிக்கைகளால் தமிழ்நாட்டின் மூளை முடுக்கெல்லாம் செய்தி போய் விடும்.
- இலவசங்கள் எங்கிருந்து வருகின்றது என்பது மக்களுக்கு இப்பவாவது தெரிந்திருக்கும்.
முக்கியமாக ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்கள் இதனை பெருவாரியான மக்களுக்கு போய் சேர்த்துள்ளது.அதன் சேவைகளுக்கு நன்றி.
முக்கிய சுட்டிகள்:
தினமணி:
http://bit.ly/asiuox
http://bit.ly/8XQPcP
ஓபன் மேகசின் :
http://www.openthemagazine.com/
அவுட்லுக்:
http://www.outlookindia.com/article.aspx?268064
பேஸ்புக்:
http://www.facebook.com/pages/Barkha-Dutt-Powerbrokering-Stops-Here/174139109279404?ref=mf
பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில்ஓட்டை பதியுங்கள். நன்றி...