சிவா மனசுல சக்தி - விமர்சனம்

சிவா மனசுல சக்தி - ஆடியோ






விகடன் டாக்கீசின் முதல் படமான இந்த படத்திக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் சியவா & அனுயா நடித்துள்ளார்கள். பிப்ரவரி14 ம் தேதி வெளியாகவுள்ள இந்தபடத்தின் இசை கடந்த 25ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தைவெளியிடும் என்ற நிலையில், அது விலகி கொண்டதாக இன்று அறிவித்தது.ஆதாரத்திற்கு சொடுக்குக






இந்த படத்தில மொத்தம் தீம் ம்யூஸிக்கையும் சேர்த்து 7 பாடல்கள்.

எம் ஜி ஆர் இல்லேங்க :

ஹீரோ அறிமுக song காக வரும் 5 min வரும் இந்த பாடலை ஹரிச்சந்திரன் பாடியுள்ளார். துள்ளல் இசை பாடலான இந்த பாடல் ஜீவா ரசிகர்களைஏமாற்றவில்லை என்றே சொல்லலாம்.

ஒரு அடங்கபிடாரி :
ஷங்கர் மஹதேவன், ஸ்வேதா பாடியுள்ள இந்த பாடல் அவ்வளவாக நம்மைஈர்க்கவில்லை. யுவனின் பழைய பட சாயல் தெரிகிறது.

எப்படியோ மாட்டிக்கிட்டேன் :
கிளிண்டன் , ந்ருத்யா பாடியுள்ள இந்த பாடல் சுமார் ரகம்.

ஒரு கல், ஒரு கண்ணாடி (யுவன்):
யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இந்த பாடல் நிச்சயம் இந்த வருட ஹிட்லிஸ்ட்டில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. கேட்க இனிமையாக இருக்கும் இந்தசோக பாடலானது இந்த ஆல்பத்தில் நம்1 என சொல்லலாம்.

தித்திக்கும் தீயை :
கே .கே , ஸ்வேதா பாடியுள்ள இந்த பாடலை கேட்கலாம்.

ஒரு கல், ஒரு கண்ணாடி(அட்னன் சாமி) :
முன்னே ரசித்த இதே பாடல் ஏனோ அட்னன் சாமியின் குரலில் ரசிக்கமுடியவில்லை .

ஒரு பார்வையில்:
ரஞ்சித் பாடியுள்ள இந்த தீம் பாடலான இந்த பாடல் 2 நிமிடத்திற்கும் குறைவானநேரமே வந்தாலும் மனதை வருடுகிறது.



ரேட்டிங் : 2/5.


டிரைலர் :




பின்னோட்டமிடுங்கள் நண்பர்களே...

2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல விமர்சனம் நண்பா.. எனக்கு எப்படியோ மாட்டிக்கிட்டேன் பாடல் ரொம்ப பிடித்தது..

சம்பத் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல விமர்சனம் நண்பா.. எனக்கு எப்படியோ மாட்டிக்கிட்டேன் பாடல் ரொம்ப பிடித்தது..//

நண்பா,
வருகைக்கு நன்றி...

Post a Comment