நான் கடவுள் படத்திற்கு எந்த ஒரு எதிர்பார்பும் இல்லாமல் மாயாஜால் திரையரங்கிற்கு நண்பனின் வற்புறுத்தலால் செல்ல நேர்ந்தது. பாலா என்ற கலைஞனை பிடித்தாலும், அஜித்துடன் நான் கடவுள் பட ஆரம்ப வேளையில் ஏற்பட்ட பிரச்சினையின் போது கொஞ்சம் மட்டமாக (அடியாள் மூலம்) நடந்து கொண்டார் என்பதற்காக இந்த படம் பார்க்க கூடாது என்று இருந்தேன். நண்பனின் வற்புறுத்தலால் பார்க்க நேர்ந்தது. ரொம்ப அதிகமான ஷோ திரையிட்டதால் மாலை 5 மணி ஷோ வில் டிக்கெட் எளிதாக கிடைத்தது.
படத்தை பற்றி வலை பதிவர்கள் ஏற்கனவே அலசி ஆராய்ந்து விட்டதால் ஒரு சில விஷயங்களை மட்டும் பதிய ஆசை படுகிறேன்.
ஆர்யா:
காசியில் படம் ஆரம்பிக்கும் போதே பாலா நம்மை நம் பார்க்காத வேறு ஒரு உலகிற்கு கொண்டு சென்று விடுகிறார். ஆர்யாவின் அறிமுக காட்சிகள் நம்மை மிரள வைக்கின்றன. இந்த கேரக்டர் ஆனது பிதாமகன் படத்தின் விக்ரமை நினைவுபடுத்தினாலும் ஆர்யா முந்தைய சாக்லேட் பாய் இமேஜ் ஐ விட்டு வெளியே வந்து புது ரூட் கு உதவியுள்ளது. சூர்யா க்கு ஒரு நந்தா என்றால் ஆர்யாவுக்கு நிச்சயமாக "நான் கடவுள்" கை கொடுக்கும். தலை கீழாக அவர் சிரசாசனம் செய்யும் காட்சிகளில் விசில் பறக்கிறது. அஜித் இந்த அளவுக்கு நடித்திருப்பாரா என்பது சந்தேகமே.
பூஜா:
பாவனா,மீனாக்ஷி,பார்வதி, தூத்துகுடி கார்த்திகா நடிப்பதாக இருந்து கடைசியாக பூஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.கண் தெரியாத வேடத்தில் நடித்த இந்த படத்திற்காக இவருக்கு நிச்சயம் அவார்ட் கிடைப்பது உறுதி. பருத்திவீரன் ப்ரியாமணியை விட நன்றாகவே நடித்து ஸ்கோர் செய்துள்ளார். அதுவும் கிளைமாக்ஸ் காட்சியின் ஐந்து நிமிடங்களும் பட்டையை கிளப்பியிருப்பார்...இதுவரை வந்த பாலா படங்களில் ஹீரோயினுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம்,பாராட்டு கிடைத்திருக்காது. வில்லனிடம் அடி வாங்க முடியாமல் கடவுளிடம்(ஆர்யா அல்ல) மன்றாடுவதும் , கடைசியில் ஆர்யாவை தேடி வந்து பேசும் வசனங்களும் படத்திற்கு பலம். ஜெயமோகன் தன் பணியை நன்றாகவே செய்துள்ளார்.
வில்லன்:
ஹீரோவை காசியில் காட்டும் போது வில்லன், பிச்சை காரர்களை வைத்து தொழில் செய்வதாக தமிழ் நாட்டில் காட்டுகிறார்கள். அவர்கள் படும் துன்பங்களை காட்டும் ஆரம்ப காட்சிகளை பார்க்க முடியாமல் படத்தை விட்டு எழுந்து சென்று விடலாம் என கூட நினைத்தேன்.அந்த அளவுக்கு வில்லன்(அறிமுகம்) கொடுமை படுத்துவதாக காண்பிப்பார்கள்.வசன உச்சரிப்பிலும் உருவத்திலும் நன்றாக மிரட்டுகிறார். நல்ல வேலை பிரகாஷ் ராஜ், சுமன், ஆஷிஷ் வித்யார்த்தி என்று போடவில்லை.
அஜீத்(?) :
இந்த கதையில் நடிக்காமல் (தலை) தப்பினார்.
மற்றவர்கள்:
நான்கு ஜோதிடர்களின் கணிப்பால் காசியில் தொலைத்த தனது பையனை தேடி வரும் அப்பாவாக மஹாதேவன் (பிதாமகன் வில்லன்) . தேடி வந்த இடத்தில் அங்கு இருக்கும் புரோகிதரிடம் திட்டு வாங்கும் போது நன்கு நடித்துள்ளார்.
அம்மா கதாபாத்திரத்திற்கு எப்போதுமே ஆர்யா வை நினைத்து அழும் வேடம். ஒரு தங்கையும் இருக்கிறார்.
அனைத்து பிச்சைக்காரர்கள் படும் (பெரியவர் முதல் சிறுவர்கள் வரை) கொடுமைகளுடன் ஆரம்பித்து, செல்ல செல்ல அவர்களுக்குள்ளேயே நடக்கும் காமெடி, அசா பாசங்களை நன்றாக காண்பிப்பார்கள். அதுவும் ஒரு சிறுவன் "அம்பானி" பற்றி சொல்லும்போது த்யேட்டரில் அனைவரும் ரசிப்பது நிஜம்.
சமூகத்தை சீரழிப்பவர்களின் மரணம் தண்டனையாகவும், கஷ்டப்பட்டு முடியாதவர்களின் மரணம் அவர்களே வரமாகக் கொள்ள வேண்டும் என குரு சொன்ன வேத வாக்கை படத்தில் ஆர்யா என்ன செய்கிறார் என்பதே பாலாவின் "நான் கடவுள்" .
கண்டிப்பாக ஒரு தடவை (மட்டும்) தியேட்டரில் பார்க்க வேண்டிய நல்ல படம்.
1 comments:
Father character is not done by Mahadevan , his name is Alagan Tamilmani.
Post a Comment