கண்டிப்பாக பார்த்திருக்கவே கூடாத படங்கள்:

98 க்கு பின் தான் (அதாவது பத்தாவது முடித்து பாலி. சேர்ந்த பின்) நான் தியேட்டருக்கு சென்று நண்பர்களுடன் பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் கல்லூரி காலத்தில் ஒரு படம் விடாமல் பார்ப்பதுண்டு.

போன வாரம் மோதி விளையாடு படம் பார்த்து இது போல வேறு எந்த படத்திற்கு விமர்சனமே பார்க்காமல் போய் மொக்கை வாங்கி வந்தோம் என உட்கார்ந்து யோசித்ததில் கீழ்கண்ட படங்கள் ஞாபகத்திற்கு வந்தன.

இவையாவும் நான் தியேட்டரில் முதல் வாரமே பார்த்தவை...டிவியில் பார்த்ததையும் சேர்த்தால் லிஸ்ட் போய் கொண்டே இருக்கும். ;-)


1.டைம்:

பிரபு தேவா, சிம்ரன் மற்றும் ராதிகா சவுத்ரி நடித்த இந்த படம் 1999 ம் ஆண்டில் வெளி வந்தது. சிம்ரன் படங்களை விரும்பி பார்ப்பேன் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனேன். இப்படத்தில் இளையராஜா பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.

ஆனால் என்ன செய்ய, என் டைம் சரியில்லை போல.மட்டமான திரைக்கதை. திருச்சியில் ஒரு வாரமோ பத்து நாளோ தான் படம் ஓடியது.

2.பார்வை ஒன்றே போதுமே:

2001ல் வெளி வந்த இந்த படத்தில் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது அனைவரும் அரிந்ததே.அறிமுக இயக்குனர் பரணி அருமையாக இசையமைத்திருப்பார். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாடல்களுக்காகவே இந்த படத்திற்கு சென்றோம். முக்கோண காதல் கதை. பாடல்களும்,அவை ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதமும் நன்றாக இருந்தாலும் மட்டமான திரைகதையில் இடைசொறுகலாகவே இவை இருந்தன. இதே வருடம் வெளிவந்த “மின்னலேஎனக்கு ரொம்ப பிடித்திருந்தது.


இந்த படம் flop ஆன போதிலும் இதே கூட்டணி “பேசாத கண்ணும் பேசுமேஎன்ற படத்தையும் எடுத்த்தது. ஆனால் பாடல்கள் கூட இதில் கைகொடுக்கவில்லை.

3.ஸ்டார்:

ஜோடி பாதிப்பில் ப்ரவீன்காந்தை நம்பி சென்ற படம். ம்ம்ம்..மற்ற படி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

மோதி விளையாடு கதை இதனுடன் ஒத்து இருக்கும்.

4. ராஜா:

முடிந்த வரை தல படத்தை சீக்கிரமே பார்த்து விடுவேன். எழிலின் முந்தைய படமான “பூ.உ.வாநன்றாக இருந்தது. ஆனால் “ஜோவை இந்த படத்தில் சரியாக பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.


அதே போல் தலைக்கும் பெருசா ஆக்சன் எதுவும் இருக்காது.வடிவேலு காமெடியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது.இது வெளிவந்தது 2002 ம் ஆண்டு.

5.ட்ரீம்ஸ்

துள்ளுவதோ இளமை வெற்றி, கஸ்தூரி ராஜாவை அதே பாணியில் இன்னொரு படம் எடுக்க தூண்டியிருக்கும் போல. தனுஷ்,தியா வை வைத்து இந்த படத்தை எடுத்திருந்தார்.2004ல் வெளியானது. அப்போது தான் நான் சென்னை வந்த சமயம்.


பாடல்கள்,திரைக்கதை அனைத்தும் மோசம்.இதில் டபுள் மீனிங் வசனங்கள் வேறு. இதே கால கட்டத்தில் அப்போது வெளியான சிம்புவின் மன்மதன் சூப்பர் ஹிட்.

6.பெப்ரவரி 14

2005ல் இந்த படம் வெளியாகும் முன்பு ஆ.வி,குமுதம் போன்றவற்றில் ரொம்பவெ பில்டப் கொடுத்திருந்ததால் இந்த படத்தை பார்க்க சென்றேன்.


சிறுவன் கார்டூன் கேரக்டரில் வருவது புதுமையாக இருந்தாலும், திரைக்கதை ரொம்ப மெதுவாக சென்றதால் நான் என் நண்பர்களுடன் வெளியெறிவிட்டேன்.

7.இதய திருடன்:

ஜெயம் ரவி+காம்னா+சரண் போன்ற இளமை கூட்டணிக்காகவே முதல் நாள் முதல் ஷோ உதயம் தியேட்டர் சென்றேன்.


படம் செம போர். இதில் ப்ரகாஷ் ராஜை வீணடித்திருப்பார்கள்.

8.ஜி:

தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த ‘தலக்கு இந்த படம் கை கொடுக்கும் என நினைத்திருந்தேன். இதில் லிங்குசாமி டைரக்டர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பாடல்கள் வேறு எனக்கு பிடித்திருந்ததால் முதல் நாளே சென்றேன்.


படக்காட்சிகள் ஆயுத எழுத்து படத்தை ஒத்திருந்ததால் படம் பிடிக்கவில்லை.திரைக்கதையும் ரொம்ப ஸ்லோ.

9.ஆழ்வார்:

வரலாறு படத்தில் நடித்து தன் பழைய ஃபார்முக்கு தல திரும்பியிருந்தது இந்த படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த்தது. போதாததிற்கு அசின் ஹீரோயின்.

எதிர்பார்ப்புடன் தியேட்டர் சென்றால்,பழைய குருடி,கதவை திரடி என்பது போல் உப்பு சப்பில்லாத பழிவாங்கும் ப்ழைய பார்முலா கதை.

2007 ல் வெளிவந்த இந்த படம் அஜீத் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.


10.இந்திரலோகத்தில் நா.அழகப்பன்:

இம்சை அரசன் எனக்கு ரொம்ப பிடித்த ப்டம்.சிம்பு தேவன் வரலாற்றுடன் இன்றைய அரசியல்,அரசு அலுவலர்களை நன்றாக ஒரு பிடி பிடித்திருப்பார்.வடிவேலுவும் செமயா நடித்திருப்பார்.

எனவே வ்டிவேலு இதிலும் கலக்கியிருப்பார் என்று சென்றால் காதில் ரத்தம் வராத குறையாக காமெடி என்ற பெயரில் கடித்து குதரியிருப்பார்கள்.


ம்ம்ம்...எப்படித்தான் கேபிள்சங்கர்,கார்த்திகை பாண்டியன்,ஜெட்லீ போன்றோர்களால் முதல் நாளே மொக்கை படங்களை பார்க்க முடிகின்றதோ தெரியவில்லை :-))


இதையெல்லாம் வைத்து நான் சீக்கிரமே தியேட்டரில் படம் பார்த்தால் படம் ஊத்திக்கொள்ளும் என நினைக்க வேண்டாம்.


டிஸ்கி:

இளைய தளபதியின் படங்களை தேட வேண்டாம். அவரின் படங்களை ரெவியூ பார்த்தாலும் தியேட்டரில் போய் பார்ப்பது கிடையாது (நன்றி : புதிய கீதை)


பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில்ஓட்டை பதியுங்கள். நன்றி...



45 comments:

ஈரோடு கதிர் said...

வெரிகுட்... நான் இந்த பத்தையுமே பார்த்ததில்லை.... எப்பூபூபூபூடி

சம்பத் said...

////கதிர் - ஈரோடு Says:
August 1, 2009 5:20 AM

வெரிகுட்... நான் இந்த பத்தையுமே பார்த்ததில்லை.... எப்பூபூபூபூடி/////

தப்பித்து விட்டீங்கள் நண்பா...:-))

tenkasikaran.blogspot.com said...

naan intha 10ium 10 mins l paarthachu,ellam DVD player uthavi than .athulathan forward pannamudium.

gandhi

tenkasikaran.blogspot.com said...

நண்பா நான் பிளாக் எழுத ஆசை படுறேன்,எப்படி ஒரு பிளாக் ஓபன் பன்னுவது

காந்தி

Anonymous said...

////hai Says:
August 1, 2009 5:37 AM

நண்பா நான் பிளாக் எழுத ஆசை படுறேன்,எப்படி ஒரு பிளாக் ஓபன் பன்னுவது

காந்தி////

Gandhi,

You can find the information from here...
http://tamilinblogs.blogspot.com/

http://answers.yahoo.com/question/index?qid=20080323234002AALUgmI

துபாய் ராஜா said...

அருமையான ஃப்ளாப் படங்கள் தொகுப்பு.

நண்பர் ஒருவர் 'ட்ரீம்ஸ்' பட நெல்லை விநியோக உரிமை வாங்கி கையை சுட்டுகொண்டார்.

'ஜி'யின் 'டிங் டாங் கோயில் மணி...' பாடல் மறக்க முடியாதது.

'பார்வை ஒன்று போதுமே' படப்பாடல்களும் அருமையானவை.

கிரி said...

இதுல ட்ரீம்ஸ் பாதி வரை நல்லா தான் இருக்கும்....அதன் பிறகு தான் மொக்கை போட்டுட்டானுக

'பார்வை ஒன்று போதுமே பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்..

படங்கள் நீங்க கூறியவை சரியாக தான் இருக்கு ;-)

நாடோடி இலக்கியன் said...

பிப்ரவரி 14 மட்டுதான் இந்த லிஸ்டில் நான் பார்த்திருக்கிறேன்.செம்ம போர்.'ராஜா' டீவியில் பார்த்திருக்கிறேன்.பிரியங்கா திரிவேதி பார்ட் மட்டும் ஓரளவிற்கு சுமாரா இருக்கும்.

பார்த்திருக்கவே கூடாத படங்களின் வரிசையில் என்னுடைய லிஸ்ட்டில் முதல் இரண்டு இடத்தில் இருப்பது சக்கரக்கட்டி மற்றும் மழை.

டிஸ்கி: :)

சம்பத் said...

//துபாய் ராஜா Says:
August 1, 2009 6:01 AM

அருமையான ஃப்ளாப் படங்கள் தொகுப்பு.

நண்பர் ஒருவர் 'ட்ரீம்ஸ்' பட நெல்லை விநியோக உரிமை வாங்கி கையை சுட்டுகொண்டார்.

'ஜி'யின் 'டிங் டாங் கோயில் மணி...' பாடல் மறக்க முடியாதது.

'பார்வை ஒன்று போதுமே' படப்பாடல்களும் அருமையானவை.///

ஆம் நண்பரே...
நீங்கள் சொல்வது சரிதான். வருகைக்கு நன்றி..

சம்பத் said...

///
கிரி Says:
August 1, 2009 6:17 AM

இதுல ட்ரீம்ஸ் பாதி வரை நல்லா தான் இருக்கும்....அதன் பிறகு தான் மொக்கை போட்டுட்டானுக

'பார்வை ஒன்று போதுமே பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்..

படங்கள் நீங்க கூறியவை சரியாக தான் இருக்கு ;-)////

வருகைக்கு நன்றி கிரி...
இவையெல்லாம் நன் ரிசல்ட் தெரியாமல் பார்த்த படங்கள் மட்டுமே..... :-))

சம்பத் said...

///
நாடோடி இலக்கியன் Says:
August 1, 2009 6:49 AM

பிப்ரவரி 14 மட்டுதான் இந்த லிஸ்டில் நான் பார்த்திருக்கிறேன்.செம்ம போர்.'ராஜா' டீவியில் பார்த்திருக்கிறேன்.பிரியங்கா திரிவேதி பார்ட் மட்டும் ஓரளவிற்கு சுமாரா இருக்கும்.

பார்த்திருக்கவே கூடாத படங்களின் வரிசையில் என்னுடைய லிஸ்ட்டில் முதல் இரண்டு இடத்தில் இருப்பது சக்கரக்கட்டி மற்றும் மழை.

டிஸ்கி: :)////

ரிசல்ட் தெரிந்ததால் நீங்கள் சொன்ன அந்த இரண்டு படங்களையும் பார்த்ததில்லை.
வருகைக்கு நன்றி...அடிக்கடி வாங்க...

Suresh said...

பகவதி மிஸ் அண்ணே நான் எந்த படத்தையும் பார்க்கவில்லை இந்த லிஸ்ட்டில் ஜியை தவிர பார்த்த பின்பு வருத்தம் தான் என்ன செய்ய

சம்பத் said...

////
Suresh Says:
August 1, 2009 10:26 AM

பகவதி மிஸ் அண்ணே நான் எந்த படத்தையும் பார்க்கவில்லை இந்த லிஸ்ட்டில் ஜியை தவிர பார்த்த பின்பு வருத்தம் தான் என்ன செய்ய///

மேலே சொன்னதெல்லாம் review பார்க்காமல் பார்த்த படங்கள் சுரேஷ்...ம்ம்ம்...பகவதின்னு ஒரு படம் வந்ததாகவே ஞாபகம் இல்லையே... :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

Anonymous said...

Nice. :-)

சம்பத் said...

///SUREஷ் (பழனியிலிருந்து) Says:
August 1, 2009 11:46 AM

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே////

நட்புக்கு நன்றி நண்பா....

சம்பத் said...

///Anonymous Says:
August 1, 2009 11:56 AM

Nice. :-)////

வருகைக்கு நன்றி அனானி...பெயரை வெளியிட்டிருக்கலாமே ;--)

குறை ஒன்றும் இல்லை !!! said...

நானும் உங்க பத்தில் பங்கு கொள்கிறேன்.. ஆனால் இன்னும் நிறைய இருக்குமே> யோசியுங்கள்..

சம்பத் said...

///குறை ஒன்றும் இல்லை !!! Says:
August 1, 2009 12:41 PM

நானும் உங்க பத்தில் பங்கு கொள்கிறேன்.. ஆனால் இன்னும் நிறைய இருக்குமே> யோசியுங்கள்..///

என் லிஸ்ட் நான் தியேட்டரில் பார்த்தவை மட்டும்... :-)

சாபாஹா said...

நீங்க சொன்ன அந்த லிஸ்டு எனக்கும் பொருந்தும் தோழரே! இருதியில் கூறியிருந்த இளய தளபதி கமென்ட் படு ஜேர்!!!!

Ragztar said...

naan ethayume paarkkaviallai

சம்பத் said...

///
சாபாஹா Says:
August 2, 2009 12:01 AM

நீங்க சொன்ன அந்த லிஸ்டு எனக்கும் பொருந்தும் தோழரே! இருதியில் கூறியிருந்த இளய தளபதி கமென்ட் படு ஜேர்!!!!///

வருகைக்கு நன்றி சாபாஹா ...அடிக்கடி வாங்க...

சம்பத் said...

//ஓவியன் Says:
August 2, 2009 3:52 AM

naan ethayume paarkkaviallai///

தப்பித்து விட்டீங்கள் நண்பா...அடிக்கடி வாங்க...உங்கள் விமர்சனத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்...

CA Venkatesh Krishnan said...

:))

geethappriyan said...

நண்பர் சம்பத்
பதிவு என் கடந்த வருட சினிமா பார்த்த நினைவுகளை மீட்டெடுத்தது.
பகிர்வுக்கு நன்றி.
ஒற்று போட்டாச்சுங்க.
சிறு குறிப்பு:-
மொக்கை படங்களுக்கு விமர்சனம் போடுவதால் ஒரு பயனும் இல்லைங்க.
அதற்கு வேறு எதாவது நல்லதா எழுதலாம்க.(மாசிலாமணி,மோதி விளையாடு அது பாட்டு வரட்டும் போவட்டும்க)
இசை விமர்சனங்கள் நன்று.
மீண்டும் வருகிறேன் நண்பரே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ட்ரீம்ஸ் படம் பல வருடம் எடுத்த படம். ஒரு சீன்ல மாடி ஏறும்போது தனுஷ் ஒல்லியா இருப்பார். மாடிக்கு போனதும் கொஞ்சம் சதை போட்டு தாடி வச்சிருப்பார். நான் கூட அவ்வளவு உயரமான மாடியா இருக்குமோனு நினச்சிட்டேன். படம் முழுவதும் இப்படிதான் தனுஷ் மாறி மாறி வருவார்

PNA Prasanna said...

http://pnaptamil.blogspot.com/2009/08/blog-post.html

Anonymous said...

enamo ajith bharath dhanushlam will smith rangeku nadika theriyum avungale sothapitanganum then vijay nalla padamae kudukalanu mathiri soli irukuinga boss padathuku collection mukiyam ilana padam edukka yarrum vara maatanga.pokiri,ghilli masala padam aanalum collection wise sema hit.neenga sonna 10 padathula producersa thedinalnum kedaika maatanga.

கார்த்தி said...

Star is not such a bad film in my opinion.
I can't agree with you in dat film.
but if i take other films ur feelings r same with me.

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net

Anonymous said...

இளைய தளபதியின் படங்களை தேட வேண்டாம். அவரின் படங்களை ரெவியூ பார்த்தாலும் தியேட்டரில் போய் பார்ப்பது கிடையாது (நன்றி : புதிய கீதை)
.... hahahahahha

Anonymous said...

you can atted my site your blog
HTML CODE your taken


http://puthumainew.blogspot.com

சம்பத் said...

///இளைய பல்லவன் Says:
August 2, 2009 5:40 AM

:))///

Thanks இளைய பல்லவன்...

சம்பத் said...

///கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. Says:
August 2, 2009 9:22 AM

நண்பர் சம்பத்
பதிவு என் கடந்த வருட சினிமா பார்த்த நினைவுகளை மீட்டெடுத்தது.
பகிர்வுக்கு நன்றி.
ஒற்று போட்டாச்சுங்க.
சிறு குறிப்பு:-
மொக்கை படங்களுக்கு விமர்சனம் போடுவதால் ஒரு பயனும் இல்லைங்க.
அதற்கு வேறு எதாவது நல்லதா எழுதலாம்க.(மாசிலாமணி,மோதி விளையாடு அது பாட்டு வரட்டும் போவட்டும்க)
இசை விமர்சனங்கள் நன்று.
மீண்டும் வருகிறேன் நண்பரே.////

ரொம்ப நன்றி கார்த்தி....மோதி விளையாடு எனக்கு பிடிக்கலங்க...அதான் சும்மா விமர்சனம் போட்டேன்.. :)

சம்பத் said...

///
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Says:
August 2, 2009 3:51 PM

ட்ரீம்ஸ் படம் பல வருடம் எடுத்த படம். ஒரு சீன்ல மாடி ஏறும்போது தனுஷ் ஒல்லியா இருப்பார். மாடிக்கு போனதும் கொஞ்சம் சதை போட்டு தாடி வச்சிருப்பார். நான் கூட அவ்வளவு உயரமான மாடியா இருக்குமோனு நினச்சிட்டேன். படம் முழுவதும் இப்படிதான் தனுஷ் மாறி மாறி வருவார்
///

தனுஷ் பற்றி நீங்க சொல்வது முற்றிலும் உண்மை நண்பா...
வருகைக்கு நன்றி...

சம்பத் said...

///கார்த்தி Says:
August 2, 2009 9:27 PM

Star is not such a bad film in my opinion.
I can't agree with you in dat film.
but if i take other films ur feelings r same with me.///

Thanks KARTHI.....

Anonymous said...

//இளைய தளபதியின் படங்களை தேட வேண்டாம். அவரின் படங்களை ரெவியூ பார்த்தாலும் தியேட்டரில் போய் பார்ப்பது கிடையாது//

ரிப்பீட்டே

நான் இதில் எந்த படமும் பார்த்ததில்லை


அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

சம்பத் said...

நன்றி அம்மு...

Anonymous said...

சம்பத் ..என்னுடைய ப்ளாக்கில் உங்களுக்கு ஒரு மூன்று விருது காத்துக்கொண்டிருக்கிறது..மறுப்பேதும் சொல்லாமல் பெற்றுக்கொள்ளுங்கள்..நன்றி..நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு கொடுங்கள்..

ரொம்ப நாள்ளா பதிவேதும் போடல?

அன்புடன்,
அம்மு.

Prathap Kumar S. said...

வடிந்தெடுத்த மொக்கைப்படங்கள்... இதுல நான் பார்த்தது ஆழ்வார் மட்டும்...அதை தாங்க முடில...எப்படி தல இத்தனை படங்களை பார்த்துட்டு தாங்கிட்டீங்க...எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு....

dondu(#11168674346665545885) said...

ஸ்டார் எனக்கு மிகவும் பிடித்த படம். அது பற்றி நான் இட்ட பதிவு, http://dondu.blogspot.com/2007/02/blog-post_16.html

நம் ஒரு படத்தைப் பார்க்கும்போது நமது மனநிலையும் ஒரு பங்கை வகிக்கிறது என நினைக்கிறேன்.

அதுவும் படம் வந்து முதல் தினம் முதல் ஷோ என்பது பலதடவை தொல்லைகளையே தந்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Very late comment, but to express my happiness, i want to leave this comment. நல்ல வேலை, நான் இந்த movie எதையும் பார்க்கவில்லை, by the way, your observation is great

வினோத் கெளதம் said...

நல்லா எழுதி இருக்கிங்க..ஏன் தொடர்ந்து எழுதுல..

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

February'14 படம் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருந்தது. பாட்டெல்லாம் எனக்கு பிடிச்சு இருந்ததுங்க..

சம்பத் said...

///வினோத்கெளதம் Says:
December 29, 2009 11:27 PM

நல்லா எழுதி இருக்கிங்க..ஏன் தொடர்ந்து எழுதுல..///

Thanks for ur comment Vinod...I will start writing soon...

Post a Comment