மோதி விளையாடு - திரை விமர்சனம்

"நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு ஆக்‌ஷன் படத்தை பார்த்த திருப்தி."

"நல்ல கதையம்சம் உள்ள படம்."

"அடுத்தடுத்து என்ன நடக்கின்றது என்பதனை யூகிக்க முடியாத திரைக்கதை."

"கேட்க இனிமையான பாடல்கள்."


இப்படி சொல்லிக் கொண்டே போக ஆசைதான். ஆனால் படத்தில் எதுவுமே இல்லை.காதல்

மன்னன்,ஜெமினி போன்ற “அட்டகாசமானபடஙகளை கொடுத்து “அமர்களப்படுத்திய சரண் தான் இந்த படத்தை எடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை.

கதை இதுதான்.

ஐம்பதாயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொண்ட பண முதலையான கலாபவன் மணிக்கு இரண்டு மகன்கள்.சேர்த்த சொத்துக்கள் எல்லாம் குறுக்கு வழியிலும் அடுத்தவர்களை துன்புருத்தியும் பெறப்பட்டவையகும். இரு மகன்களில் ஒருவர் சொந்த மகன் வினய். மற்றொருவர் வளர்ப்பு மகன் புது முகம் "X"(யார்னு தெர்லப்பா :)). . இருவரிடமும் பாசத்தை கொட்டி வளர்க்கிறார் மணி. இவரின் அட்டகாசங்கலை பொறுக்கமுடியாத தொழில் எதிரிகள் இவரை பழி வாங்க எண்ணி இவரின் மகனை போட்டுத்தள்ள முடிவெடுக்கின்றனர்.

நிற்க,


இதற்கு இடையே life ஐ ஜாலி பண்ணிக்கொண்டிருக்கின்றனர் வினய் யும் மற்றொரு மகனும். விஸ் காம் மாணவியான ஹீரோயின் காஜல் அகர்வால் வீசும் குளிர்பான பாட்டில் வினயின் தலையில் பட்டு ஃபெராரி கார் அக்சிடெண்ட் ஆகி மூன்று லட்சம் வரை செலவாகிறது. இதனை கழிக்க வேலைக்காரியாக வினயின் வீட்டில் இருக்க நேரிடுகிறது(ஜாலிக்காக).

காஜலின் அழகில் மயங்கி வினயும்,இன்னொரு மகனும் காதலிக்க ஆரம்பிக்க இருவரில் சொந்த மகன் வினய்க்கு வைத்த குறியில் அனாதை மகன் இறந்து விடுகிறார். அத்துடன் எப்படா விடுவாய்ங்க என எதிர்பார்த்த இடைவேளையும் வந்து விடுகிறது.


அழகாக/எதிர்பார்ப்பை தூண்ட கூடிய வகையில் இருக்க வேண்டும் என இயக்குனர் முயற்சி செய்யவே இல்லை என்பதை முதல் பாதி நமக்கு தெளிவாக உணர்த்தி விடுகிறது. அந்த அளவிற்கு முதல் பாதி மொக்கை.சில இடஙகளில் சந்தானம் சிரிக்க வைத்தாலும் மற்றவர்களின் மொக்கை முன் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


சரி இரண்டாம் பாதியில் எதாவது பண்ணியிருப்பார்கள் என்றால்,ம்ஹூம். அனாதை மகன் இறந்த பின் வினய்க்கு இருந்த உரிமைகள் எல்லாம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது.என்னவென்று பார்தால் வினய்தான் அனாதயாம். இறந்தவன் உண்மையான மகனாம். இந்த சப்பையான சஸ்பென்சை வைத்துக் கொண்டு சரண் நம்மை இந்த அளவிற்கு சோதித்திருக்க வேண்டாம்.


கதைதான் கொடுமையென்றால் வினயின் பின்னனிக்குரல் அதை விட கொடுமை. இதில் காமெடியென்னவென்றால் இவரின் கம்பெனி CEO வான வட நாட்டு சிங் இவரை விட தமிழ் நன்றாக பேசுகிறார்.

ஹரிஹரன் தமிழில் இசை அமைத்துள்ள முதல் படம்.மோதி விளையாடு...மோதி விளையாடுபாடல் மட்டும் ஒ.கே ரகம்.கேட்கலாம்.


உங்கள் நண்பர் எவரையெனும் பழி வாங்க நினைத்தால் இந்த படத்தின் டிக்கட்டை தாராளமாக கொடுக்கலாம். காஜல் அகர்வால் அழகாக இருக்கிறார். ம்ம்ம்...அவருக்காக மட்டும் போய் மொக்கை வாங்கி திரும்ப வேண்டாம்.


அப்ப இதே சரண் இயக்கும் தல யோட “அசல்படத்தோட கதி?


மொத்ததில் ஆ.வி அல்லது குமுதம் விமர்சனத்தில் கீழ்கண்டவாறு வந்தால் ஆச்சர்ய பட வேண்டாம்.


மோதி விளையாடு மொக்கை விளையாட்டு


பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருந்தால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில்ஓட்டை பதியுங்கள். நன்றி...



நினைத்தாலே இனிக்கும் - இசை விமர்சனம்

தலைவர் ரஜினியும் உலக நாயகன் கமலும் சிறு வயதில் இணைந்து நடித்து சக்கை போடு போட்ட படமான "நினைத்தாலே இனிக்கும்" படத்தின் டைட்டிலையும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படமான "க்ளாஸ் மேட்ஸ்" இன் தமிழ் பதிப்பே இந்த "புது" நி..




இதில் ப்ரித்விராஜ், ஷக்தி,ப்ரியாமணி மற்றும் கார்த்திக் குமார் நடித்துள்ளனர்.G.N.R. குமாரவேலன் எனும் புதுமுகம் இயக்க நம்ம நாக்க மூக்க புகழ் "விஜய் ஆண்டனி" இசையமைத்துள்ளார்.






இதில் மொத்தம் உள்ள 7 பாடல்களில் 2 பாடல்களை விஜய் ஆண்டனியே பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. அழகாய் பூக்குதே:
பாடியது : பிரசன்னா, ஜானகி அய்யர் பாடலாசிரியர் : கலை குமார்
மெலடி பாடலான இந்த பாடல முதல் முறை கேட்டதுமே மனதில் ஒட்டிக்கொள்கிறது. கண்டிப்பாக ஹிட்டாகக்கூடிய பாடல். ஜானகியின் குரல் கேட்க நன்றாக உள்ளது.

2. என் பேரு முல்லா:
பாடியது :விஜய் ஆண்டனி & குழுவினர் பாடலாசிரியர் : அண்ணாமலை
நக்கமுக்க, ஆத்திச்சூடி போல வழக்கமான விஜய் ஆண்டனி ஸ்பெஷல் ஜாலி பாடல். அவரே அவரது ஹாய் பிட்ச் குரலில் பாடியிருக்கிறார். அனால் இதில் ஆத்திச்சூடி பாட்டின் வாடை வீசுவதை மறுக்க முடியாது.


3. நாட்கள் நகர்ந்து …
பாடியது :கவுசிக் & குழுவினர் பாடலாசிரியர் : பிரபா
இதோ நட்பை பற்றி முழுவதாக விளக்கும் மற்றொரு பாடல் வந்தாச்சு...கேட்க இனிமையாக இருக்கிறது.ஆனால் ஒரு நிமிஷம் மட்டுமே வரும் பிட் சாங் :(.


4. பியா… பியா...
பாடியது :விஜய் ஆண்டனி & குழுவினர் பாடலாசிரியர் : அண்ணாமலை
மற்றுமொரு விஜய் அந்தோனி ஸ்பெஷல் சாங்.கண்டிப்பாக FM ரேடியோக்களில் தினமும் ஒலிக்கக்கூடிய பாடல்.மெதுவாக ஆரம்பித்து போக போக பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதுவும் பியா பியா எனும்போது கேட்க நன்றாக உள்ளது.ஆனால் பாட்டு ஆரம்பிக்கும் போது உள்ள "tune" சுக்ரன் படத்தில் உள்ள சாத்திக்கடி போத்திக்கடி பாடலின் tune போலவே உள்ளது.

5. நண்பனை பார்த்த
பாடியது :பென்னி தயாள் & குழுவினர் பாடலாசிரியர் : அண்ணாமலை
இந்த ஆல்பத்தில் உள்ள நட்பினை போற்றும் மற்றுமொரு பாடல். கேட்க இதமாக உள்ளது.

6. செக்ஸி லேடி
பாடியது :M.K. பாலாஜி,ஷீபா, மாயா,ரம்யா & குழுவினர் பாடலாசிரியர் : பிரியன்
இந்த பாடல் வழக்கமான பாடல் போலத்தான் உள்ளது.அவ்வளவாக திரும்ப திரும்ப கேட்க முடியவில்லை.

7. கல்லூரி
பாடியது :ஷீபா பாடலாசிரியர் : ஷீபா
இன்னொரு bit பாடல். OK ரகம் தான்.


எனக்கு பிடித்த பாடல்களின் வரிசை.
1. அழகாய் பூக்குதே:
2. பியா… பியா...
3. நாட்கள் நகர்ந்து …
4. என் பேரு முல்லா
5. நண்பனை பார்த்த
6. செக்ஸி லேடி
7. கல்லூரி


பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் ஓட்டை பதியுங்கள். நன்றி...