கண்டிப்பாக பார்த்திருக்கவே கூடாத படங்கள்:

98 க்கு பின் தான் (அதாவது பத்தாவது முடித்து பாலி. சேர்ந்த பின்) நான் தியேட்டருக்கு சென்று நண்பர்களுடன் பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் கல்லூரி காலத்தில் ஒரு படம் விடாமல் பார்ப்பதுண்டு.

போன வாரம் மோதி விளையாடு படம் பார்த்து இது போல வேறு எந்த படத்திற்கு விமர்சனமே பார்க்காமல் போய் மொக்கை வாங்கி வந்தோம் என உட்கார்ந்து யோசித்ததில் கீழ்கண்ட படங்கள் ஞாபகத்திற்கு வந்தன.

இவையாவும் நான் தியேட்டரில் முதல் வாரமே பார்த்தவை...டிவியில் பார்த்ததையும் சேர்த்தால் லிஸ்ட் போய் கொண்டே இருக்கும். ;-)


1.டைம்:

பிரபு தேவா, சிம்ரன் மற்றும் ராதிகா சவுத்ரி நடித்த இந்த படம் 1999 ம் ஆண்டில் வெளி வந்தது. சிம்ரன் படங்களை விரும்பி பார்ப்பேன் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனேன். இப்படத்தில் இளையராஜா பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.

ஆனால் என்ன செய்ய, என் டைம் சரியில்லை போல.மட்டமான திரைக்கதை. திருச்சியில் ஒரு வாரமோ பத்து நாளோ தான் படம் ஓடியது.

2.பார்வை ஒன்றே போதுமே:

2001ல் வெளி வந்த இந்த படத்தில் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது அனைவரும் அரிந்ததே.அறிமுக இயக்குனர் பரணி அருமையாக இசையமைத்திருப்பார். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாடல்களுக்காகவே இந்த படத்திற்கு சென்றோம். முக்கோண காதல் கதை. பாடல்களும்,அவை ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதமும் நன்றாக இருந்தாலும் மட்டமான திரைகதையில் இடைசொறுகலாகவே இவை இருந்தன. இதே வருடம் வெளிவந்த “மின்னலேஎனக்கு ரொம்ப பிடித்திருந்தது.


இந்த படம் flop ஆன போதிலும் இதே கூட்டணி “பேசாத கண்ணும் பேசுமேஎன்ற படத்தையும் எடுத்த்தது. ஆனால் பாடல்கள் கூட இதில் கைகொடுக்கவில்லை.

3.ஸ்டார்:

ஜோடி பாதிப்பில் ப்ரவீன்காந்தை நம்பி சென்ற படம். ம்ம்ம்..மற்ற படி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

மோதி விளையாடு கதை இதனுடன் ஒத்து இருக்கும்.

4. ராஜா:

முடிந்த வரை தல படத்தை சீக்கிரமே பார்த்து விடுவேன். எழிலின் முந்தைய படமான “பூ.உ.வாநன்றாக இருந்தது. ஆனால் “ஜோவை இந்த படத்தில் சரியாக பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.


அதே போல் தலைக்கும் பெருசா ஆக்சன் எதுவும் இருக்காது.வடிவேலு காமெடியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது.இது வெளிவந்தது 2002 ம் ஆண்டு.

5.ட்ரீம்ஸ்

துள்ளுவதோ இளமை வெற்றி, கஸ்தூரி ராஜாவை அதே பாணியில் இன்னொரு படம் எடுக்க தூண்டியிருக்கும் போல. தனுஷ்,தியா வை வைத்து இந்த படத்தை எடுத்திருந்தார்.2004ல் வெளியானது. அப்போது தான் நான் சென்னை வந்த சமயம்.


பாடல்கள்,திரைக்கதை அனைத்தும் மோசம்.இதில் டபுள் மீனிங் வசனங்கள் வேறு. இதே கால கட்டத்தில் அப்போது வெளியான சிம்புவின் மன்மதன் சூப்பர் ஹிட்.

6.பெப்ரவரி 14

2005ல் இந்த படம் வெளியாகும் முன்பு ஆ.வி,குமுதம் போன்றவற்றில் ரொம்பவெ பில்டப் கொடுத்திருந்ததால் இந்த படத்தை பார்க்க சென்றேன்.


சிறுவன் கார்டூன் கேரக்டரில் வருவது புதுமையாக இருந்தாலும், திரைக்கதை ரொம்ப மெதுவாக சென்றதால் நான் என் நண்பர்களுடன் வெளியெறிவிட்டேன்.

7.இதய திருடன்:

ஜெயம் ரவி+காம்னா+சரண் போன்ற இளமை கூட்டணிக்காகவே முதல் நாள் முதல் ஷோ உதயம் தியேட்டர் சென்றேன்.


படம் செம போர். இதில் ப்ரகாஷ் ராஜை வீணடித்திருப்பார்கள்.

8.ஜி:

தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த ‘தலக்கு இந்த படம் கை கொடுக்கும் என நினைத்திருந்தேன். இதில் லிங்குசாமி டைரக்டர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பாடல்கள் வேறு எனக்கு பிடித்திருந்ததால் முதல் நாளே சென்றேன்.


படக்காட்சிகள் ஆயுத எழுத்து படத்தை ஒத்திருந்ததால் படம் பிடிக்கவில்லை.திரைக்கதையும் ரொம்ப ஸ்லோ.

9.ஆழ்வார்:

வரலாறு படத்தில் நடித்து தன் பழைய ஃபார்முக்கு தல திரும்பியிருந்தது இந்த படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த்தது. போதாததிற்கு அசின் ஹீரோயின்.

எதிர்பார்ப்புடன் தியேட்டர் சென்றால்,பழைய குருடி,கதவை திரடி என்பது போல் உப்பு சப்பில்லாத பழிவாங்கும் ப்ழைய பார்முலா கதை.

2007 ல் வெளிவந்த இந்த படம் அஜீத் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.


10.இந்திரலோகத்தில் நா.அழகப்பன்:

இம்சை அரசன் எனக்கு ரொம்ப பிடித்த ப்டம்.சிம்பு தேவன் வரலாற்றுடன் இன்றைய அரசியல்,அரசு அலுவலர்களை நன்றாக ஒரு பிடி பிடித்திருப்பார்.வடிவேலுவும் செமயா நடித்திருப்பார்.

எனவே வ்டிவேலு இதிலும் கலக்கியிருப்பார் என்று சென்றால் காதில் ரத்தம் வராத குறையாக காமெடி என்ற பெயரில் கடித்து குதரியிருப்பார்கள்.


ம்ம்ம்...எப்படித்தான் கேபிள்சங்கர்,கார்த்திகை பாண்டியன்,ஜெட்லீ போன்றோர்களால் முதல் நாளே மொக்கை படங்களை பார்க்க முடிகின்றதோ தெரியவில்லை :-))


இதையெல்லாம் வைத்து நான் சீக்கிரமே தியேட்டரில் படம் பார்த்தால் படம் ஊத்திக்கொள்ளும் என நினைக்க வேண்டாம்.


டிஸ்கி:

இளைய தளபதியின் படங்களை தேட வேண்டாம். அவரின் படங்களை ரெவியூ பார்த்தாலும் தியேட்டரில் போய் பார்ப்பது கிடையாது (நன்றி : புதிய கீதை)


பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில்ஓட்டை பதியுங்கள். நன்றி...



மோதி விளையாடு - திரை விமர்சனம்

"நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு ஆக்‌ஷன் படத்தை பார்த்த திருப்தி."

"நல்ல கதையம்சம் உள்ள படம்."

"அடுத்தடுத்து என்ன நடக்கின்றது என்பதனை யூகிக்க முடியாத திரைக்கதை."

"கேட்க இனிமையான பாடல்கள்."


இப்படி சொல்லிக் கொண்டே போக ஆசைதான். ஆனால் படத்தில் எதுவுமே இல்லை.காதல்

மன்னன்,ஜெமினி போன்ற “அட்டகாசமானபடஙகளை கொடுத்து “அமர்களப்படுத்திய சரண் தான் இந்த படத்தை எடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை.

கதை இதுதான்.

ஐம்பதாயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொண்ட பண முதலையான கலாபவன் மணிக்கு இரண்டு மகன்கள்.சேர்த்த சொத்துக்கள் எல்லாம் குறுக்கு வழியிலும் அடுத்தவர்களை துன்புருத்தியும் பெறப்பட்டவையகும். இரு மகன்களில் ஒருவர் சொந்த மகன் வினய். மற்றொருவர் வளர்ப்பு மகன் புது முகம் "X"(யார்னு தெர்லப்பா :)). . இருவரிடமும் பாசத்தை கொட்டி வளர்க்கிறார் மணி. இவரின் அட்டகாசங்கலை பொறுக்கமுடியாத தொழில் எதிரிகள் இவரை பழி வாங்க எண்ணி இவரின் மகனை போட்டுத்தள்ள முடிவெடுக்கின்றனர்.

நிற்க,


இதற்கு இடையே life ஐ ஜாலி பண்ணிக்கொண்டிருக்கின்றனர் வினய் யும் மற்றொரு மகனும். விஸ் காம் மாணவியான ஹீரோயின் காஜல் அகர்வால் வீசும் குளிர்பான பாட்டில் வினயின் தலையில் பட்டு ஃபெராரி கார் அக்சிடெண்ட் ஆகி மூன்று லட்சம் வரை செலவாகிறது. இதனை கழிக்க வேலைக்காரியாக வினயின் வீட்டில் இருக்க நேரிடுகிறது(ஜாலிக்காக).

காஜலின் அழகில் மயங்கி வினயும்,இன்னொரு மகனும் காதலிக்க ஆரம்பிக்க இருவரில் சொந்த மகன் வினய்க்கு வைத்த குறியில் அனாதை மகன் இறந்து விடுகிறார். அத்துடன் எப்படா விடுவாய்ங்க என எதிர்பார்த்த இடைவேளையும் வந்து விடுகிறது.


அழகாக/எதிர்பார்ப்பை தூண்ட கூடிய வகையில் இருக்க வேண்டும் என இயக்குனர் முயற்சி செய்யவே இல்லை என்பதை முதல் பாதி நமக்கு தெளிவாக உணர்த்தி விடுகிறது. அந்த அளவிற்கு முதல் பாதி மொக்கை.சில இடஙகளில் சந்தானம் சிரிக்க வைத்தாலும் மற்றவர்களின் மொக்கை முன் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


சரி இரண்டாம் பாதியில் எதாவது பண்ணியிருப்பார்கள் என்றால்,ம்ஹூம். அனாதை மகன் இறந்த பின் வினய்க்கு இருந்த உரிமைகள் எல்லாம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது.என்னவென்று பார்தால் வினய்தான் அனாதயாம். இறந்தவன் உண்மையான மகனாம். இந்த சப்பையான சஸ்பென்சை வைத்துக் கொண்டு சரண் நம்மை இந்த அளவிற்கு சோதித்திருக்க வேண்டாம்.


கதைதான் கொடுமையென்றால் வினயின் பின்னனிக்குரல் அதை விட கொடுமை. இதில் காமெடியென்னவென்றால் இவரின் கம்பெனி CEO வான வட நாட்டு சிங் இவரை விட தமிழ் நன்றாக பேசுகிறார்.

ஹரிஹரன் தமிழில் இசை அமைத்துள்ள முதல் படம்.மோதி விளையாடு...மோதி விளையாடுபாடல் மட்டும் ஒ.கே ரகம்.கேட்கலாம்.


உங்கள் நண்பர் எவரையெனும் பழி வாங்க நினைத்தால் இந்த படத்தின் டிக்கட்டை தாராளமாக கொடுக்கலாம். காஜல் அகர்வால் அழகாக இருக்கிறார். ம்ம்ம்...அவருக்காக மட்டும் போய் மொக்கை வாங்கி திரும்ப வேண்டாம்.


அப்ப இதே சரண் இயக்கும் தல யோட “அசல்படத்தோட கதி?


மொத்ததில் ஆ.வி அல்லது குமுதம் விமர்சனத்தில் கீழ்கண்டவாறு வந்தால் ஆச்சர்ய பட வேண்டாம்.


மோதி விளையாடு மொக்கை விளையாட்டு


பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருந்தால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில்ஓட்டை பதியுங்கள். நன்றி...



நினைத்தாலே இனிக்கும் - இசை விமர்சனம்

தலைவர் ரஜினியும் உலக நாயகன் கமலும் சிறு வயதில் இணைந்து நடித்து சக்கை போடு போட்ட படமான "நினைத்தாலே இனிக்கும்" படத்தின் டைட்டிலையும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படமான "க்ளாஸ் மேட்ஸ்" இன் தமிழ் பதிப்பே இந்த "புது" நி..




இதில் ப்ரித்விராஜ், ஷக்தி,ப்ரியாமணி மற்றும் கார்த்திக் குமார் நடித்துள்ளனர்.G.N.R. குமாரவேலன் எனும் புதுமுகம் இயக்க நம்ம நாக்க மூக்க புகழ் "விஜய் ஆண்டனி" இசையமைத்துள்ளார்.






இதில் மொத்தம் உள்ள 7 பாடல்களில் 2 பாடல்களை விஜய் ஆண்டனியே பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. அழகாய் பூக்குதே:
பாடியது : பிரசன்னா, ஜானகி அய்யர் பாடலாசிரியர் : கலை குமார்
மெலடி பாடலான இந்த பாடல முதல் முறை கேட்டதுமே மனதில் ஒட்டிக்கொள்கிறது. கண்டிப்பாக ஹிட்டாகக்கூடிய பாடல். ஜானகியின் குரல் கேட்க நன்றாக உள்ளது.

2. என் பேரு முல்லா:
பாடியது :விஜய் ஆண்டனி & குழுவினர் பாடலாசிரியர் : அண்ணாமலை
நக்கமுக்க, ஆத்திச்சூடி போல வழக்கமான விஜய் ஆண்டனி ஸ்பெஷல் ஜாலி பாடல். அவரே அவரது ஹாய் பிட்ச் குரலில் பாடியிருக்கிறார். அனால் இதில் ஆத்திச்சூடி பாட்டின் வாடை வீசுவதை மறுக்க முடியாது.


3. நாட்கள் நகர்ந்து …
பாடியது :கவுசிக் & குழுவினர் பாடலாசிரியர் : பிரபா
இதோ நட்பை பற்றி முழுவதாக விளக்கும் மற்றொரு பாடல் வந்தாச்சு...கேட்க இனிமையாக இருக்கிறது.ஆனால் ஒரு நிமிஷம் மட்டுமே வரும் பிட் சாங் :(.


4. பியா… பியா...
பாடியது :விஜய் ஆண்டனி & குழுவினர் பாடலாசிரியர் : அண்ணாமலை
மற்றுமொரு விஜய் அந்தோனி ஸ்பெஷல் சாங்.கண்டிப்பாக FM ரேடியோக்களில் தினமும் ஒலிக்கக்கூடிய பாடல்.மெதுவாக ஆரம்பித்து போக போக பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதுவும் பியா பியா எனும்போது கேட்க நன்றாக உள்ளது.ஆனால் பாட்டு ஆரம்பிக்கும் போது உள்ள "tune" சுக்ரன் படத்தில் உள்ள சாத்திக்கடி போத்திக்கடி பாடலின் tune போலவே உள்ளது.

5. நண்பனை பார்த்த
பாடியது :பென்னி தயாள் & குழுவினர் பாடலாசிரியர் : அண்ணாமலை
இந்த ஆல்பத்தில் உள்ள நட்பினை போற்றும் மற்றுமொரு பாடல். கேட்க இதமாக உள்ளது.

6. செக்ஸி லேடி
பாடியது :M.K. பாலாஜி,ஷீபா, மாயா,ரம்யா & குழுவினர் பாடலாசிரியர் : பிரியன்
இந்த பாடல் வழக்கமான பாடல் போலத்தான் உள்ளது.அவ்வளவாக திரும்ப திரும்ப கேட்க முடியவில்லை.

7. கல்லூரி
பாடியது :ஷீபா பாடலாசிரியர் : ஷீபா
இன்னொரு bit பாடல். OK ரகம் தான்.


எனக்கு பிடித்த பாடல்களின் வரிசை.
1. அழகாய் பூக்குதே:
2. பியா… பியா...
3. நாட்கள் நகர்ந்து …
4. என் பேரு முல்லா
5. நண்பனை பார்த்த
6. செக்ஸி லேடி
7. கல்லூரி


பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் ஓட்டை பதியுங்கள். நன்றி...

கூகிள் மெயில் இனி தமிழ் மெயில்?

எப்போதுமே அனைத்திலும் புதுமையை முதலாவதாய் அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம் தற்போது தமிழ் உட்பட சில இந்திய மொழிகளில் மெயில் அனுப்பும் புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.

தமிழ் தவிர ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

இதனை enable செய்ய கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.
- ஜிமெயில் அக்கௌண்ட்டில் login செய்தவுடன் "settings" என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.
- அதில் "gmail display language" என்பதில் "தமிழ்" என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.
- பின் "save changes" எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் அனைத்து settings சும் save ஆகி விடும்.

பின் "அஞ்சல் எழுது" எனும் ஆப்ஷனை செலக்ட் செய்தல் கீழ்க்கண்ட கம்போசெர் திரை ஓபன் ஆகும்.




அதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் "தங்க்லீஷ்" என கொச்சையாக அழைக்கப்படும் (அதாவது vanakkam for வணக்கம்) மொழியில் டைப் செய்து நண்பர்களுக்கு அனுப்பலாம்.



இந்த வசதியானது கிராமத்தில் இருக்கும் ஆங்கிலம் தெரியாத நண்பர்களுக்கு ஒரு வரப்ப்ரசாதமாகும். நம் கருத்துக்களை நமது தாய் மொழியில் அனுப்பினால் அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். முதலில் மெயில் தமிழில் மெயில் அடிக்க கஷ்டப்பட்டாலும் பிறகு பழகிக்கொள்வர்.{நாம் கற்றுக்கொள்ளவில்லையா?}

பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் ஓட்டை பதியுங்கள். நன்றி...

ஐ பி எல் போட்டிகளை புறக்கணிப்போம்!

இன்று நடந்த இந்தியன் கிரிக்கெட் போர்டு கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை இங்கிலாந்திலோ அல்லது தென்னப்பிரிக்கவிலோ நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவு உண்மையாகவே என் போன்ற பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களை இந்திய கிரிக்கெட் புன்படுத்தியுள்ளதகவே கருதுகிறேன்.






இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த லலித்மோடி மற்றும் ஷஷாங் மனோகர், மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க மறுப்பதலே வெளிநாடுகளில் போட்டிகளை நடத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

தமிழர்கள் இலங்கையில் செத்துக்கொண்டிருந்த வேலையில் நம் கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பி அழகு பார்த்ததுதான் நம் கிரிக்கெட் போர்டு.

அவர்களை பொறுத்தவரையில் எங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்தினாலும் நம் மக்கள் டி வியில் பார்த்துக்கொள்வார்கள். அதன் மூலம் நமக்கு லாபம் கிடைக்கும் என எண்ணுகிறார்கள்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் கேள்விகள் இவைகள் தான்.

1) இங்கு தேர்தல் நடக்கிறது என்பதால் வெளிநாடுகளில் கிரிக்கெட் நடத்தும் நம் புண்ணியவான்கள் எப்படி வாக்களிக்களித்து தனது ஜனநாயக கடமைகளை நிறைவேத்த போகிறார்கள்?
2) IPL போட்டிகளை இந்த சீசனில் கட்டாயமாக நடத்தியே தீர வேண்டுமா? (போன தடவை எனக்கு தெரிந்த ஒருவர் தனது பத்தாவது படிக்கும் மகன் IPL போட்டிகளை பார்த்தே மார்க் குறைந்ததாக கூறி வருத்தப்பட்டார்.)
3) இப்படி அவசரஅவசரமாக நடத்துவதற்கு பதிலாக கொஞ்ச நாட்கள் கழித்து நடத்தினால் என்ன? (என்னதான் ஷெட்யூல் இல்லையென்றாலும் BCCI தனது power-ஐ பயன்படுத்தி)
4)ஏற்கனவே பாகிஸ்தான் போல இந்தியா வந்து விளையாட அச்சம் தெரிவிக்கும் வேளையில் நம் ஆட்களே வெளிநாடுகளில் நமது போட்டிகளை நடத்துவது அவமானமில்லையா?
5) ஐ.பி.எல் லின் இந்த முடிவுக்கு எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்க தயங்கும் நம் அரசை என்ன சொல்வது?


எனவே இந்த ஐ பி எல் போட்டிகளை புறக்கணித்து நம் நாட்டில் உள்ள பண வெறியர்களான இந்திய கிரிகெட் போர்டு,ஷாருக், ப்ரீதிஜிண்டா மற்றும் விஜய் மல்லையா போன்றோருக்கு பாடம் புகட்டுவோம்.

கொசுறு:
கடந்த முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கு அதரவு திரட்ட அழைக்கப்பட்ட "ஏய் சைலன்ஸ்" புகழ் விஜய் அழைக்கப்படுவாரா என்பதே அனைவரின் கேள்வி..

தமிழிஷில் ஓட்டளிக்க:

இதுதான் உங்கள் பாஸ்வோர்ட்டா? ஜாக்கிரதை

பொதுவா நம்ம ஆட்கள் புதிதாக மெயில் ஐ.டி க்ரியேட் பண்ணும் போது பாஸ்வோர்ட்டாக "123456" வைப்பது வழக்கம். ஆறு டிஜிட் ஏன் என்றால் அனைத்து மெயில் சர்வர்களும் குறைந்த பட்சம் 6 எழுத்துக்களை கண்டிப்பாக வைக்கவேண்டும் என்று சொல்வதுதான். மேலும் இதுதான் உலகத்திலேயே மோசமான பாஸ்வோர்ட் என வல்லுனர்கள் கணித்துள்ளார்கள். இரண்டாவதாக நம் மக்கள் அதிகம் பயன்படுத்துவது "password" என்பதாகும். இதே போல் "qwerty" (கீ போர்டில் உள்ள முதல் ஆறு ஆங்கில எழுத்துக்கள்), abc123, letmein,monkey,myspace1,password1 மற்றும் blink182 போன்றவைகள் PC Magazine நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.



இதில காமெடி என்னவென்றால் மேலேயுள்ள அனைத்தும் பொதுவாக உலக மக்கள் மனதில் உள்ள வார்த்தைகள் போல தோன்றினாலும் கீழேயுள்ள லிஸ்ட் சுவராஸ்யமாக உள்ளது. ncc1701(விண்வெளி ஊர்தி ஒன்றின் பெயர்),thx1138,qazwsx(கீ போர்டு முதல் மற்றும் இரண்டாம் வரிசைகள் ),666666(ஆறு ஆறுகள்),7777777(ஏழு ஏழுகள்) போன்றனவும் பொதுவான பாஸ்வர்டாக பயன்படுத்துவது எல்லாரும் ஒரே மாதிரி சிந்திப்பதையே கட்டுகிறது. கொரியர் மெயில் தளம் "batman", "bond007" மற்றும் "cocacola" போன்றவைகளும் அதிகமாக புழக்கத்தில் உள்ள கடவுச்சொல்லாக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் டாப் 100 மோசமான பாஸ்வர்டுகளுக்கு இங்கே சொடுக்கவும்.

எப்படி
பாதுகாப்பான பாஸ்வர்டுகளை உருவாக்குவது?


1) எந்த சூழ்நிலையிலும் அகராதியிலுள்ள (dictionary) வார்த்தைகளை பாஸ்வர்டாக பயன்படுத்தக்கூடாது. ஹேக்கர்கள் இதன் மூலமே ஹேக் செய்வார்கள்.

2) பாஸ்வர்ட் அமைக்கும் பொது ஷிப்ட் கீக்களை பயன்படுத்தி காபிடல் லெட்டர்களை பயன்படுத்த வேண்டும்.
3) நாம் அமைக்கும் ரகசிய சொல்லில் ஸ்பெஷல் கேரக்டர் இருக்குமாறு வைக்க வேண்டும்.
4) நமது பெயரின் ஒருபகுதியோ அல்லது மகன்/மகள் பெயர்களையோ வைக்க கூடாது.
5) குறைந்த பட்சம் 60 நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வோர்டை மாற்றுவது நல்லது. மேலும் சில டிப்ஸ் நீங்கள் அமைத்த பாஸ்வர்ட் பாதுகாப்பானதா என அறிய இங்கே சொடுக்கவும்.


கொசுறு
செய்தி:
இணையம் பயன்படுத்தும் மக்களில் 61% பேர்கள் ஒரே யூசர் நேம் மற்றும் பாஸ்வர்ட்களை வேறுவேறு தளங்களுக்கு பயன்படுத்துகின்றனர். அதில் நீங்களும் ஒருவர்தானே :)

தமிழிஷில் ஓட்டளிக்க...

அயன் சூர்யா - அசத்தல் படங்கள்

வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் அயன். இந்த படத்தில் தமன்னா ஜோடியாக நடித்துள்ளார். பிரபு கௌரவமான வேடத்தில் நடித்துள்ளார். கே.வீ. ஆனந்த் இயகியுள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாடல்கள் வாரணம் ஆயிரம் அளவுக்கு இல்லாவிட்டாலும் கேட்கும்படியாகவே உள்ளது.

இப்படத்தின் லேட்டஸ்டு ஸ்டில்ஸ் கீழே.














































தமிழிஷில் ஓட்டளிக்க

ஆஸ்கர் தமிழன் சென்னையில் :படங்கள்

ஒரே படத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற முதல் இந்தியரான,தமிழரான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. (விஜய்,ஷங்கருக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கும் சத்யபாமா போன்ற பல்கலைகழகங்கள் இவரை விட்டுவிட்டால் தேவலை. அவர்களோடு இவரையும் சேர்க்க வேண்டாம்). இன்று சென்னை வந்த ஏ.ஆர்.ஆருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பட்டது.

புகைப்படங்கள் கீழே..






















தமிழனாக பிறந்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாக ஆஸ்கர் நாயகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.இதே கருத்தை மும்பையிலும் கூறுவார் என நம்பலாம்.

புகழ் வரும்போது மனிதர்கள் எல்லாவற்றையும் மறப்பார்கள். ஆனால் நம் இசை புயல் இறைவனை,அம்மாவை,தமிழை நினைத்து இருப்பது நம் அனைவருக்கும் பெருமை.
மென்மேலும் விருதுகள் பெற வாழ்த்துவோம்.

பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்க கூடாத பத்து கேள்விகள்

வலைப்பதிவுலகில் உள்ள பதிவர்களில் 10 கேள்விகள் கேட்காத ஆட்களே இல்லை. மீதமுள்ளோர் யார் என்று பார்த்தால் பத்தாம் வகுப்பு மாணவர்களும்,பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் மட்டுமே... ("ப"வுக்கு "பா". :-) ). எனவே 1998 பத்தாம் வகுப்பில் படித்ததை ரூம் போட்டு யோசித்ததில் உதித்தவைகள் இவைகள்...

இந்த 10 கேள்விகள் கான்செப்ட்டை ஆரம்பித்தவர் பொறுத்தருள்க...



1) சிவப்பு பாஸ்பரஸிர்கும்,வெண் பாஸ்பரஸிர்கும் உள்ள வேற்றுமைகள் என்ன?
2) நாலடியார் குறிப்பு வரைக
3) உங்கள் ஊரில் உள்ள குடிநீர் பிரச்சினையை போக்க உங்கள் மாவட்ட கலெக்டருக்கு மடல் வரைக..
4) நீ முதலமைச்சராக வந்தால் என்னன்ன செய்வாய் என கற்பனை கட்டுரை வரைக...
5) "அகர" என தொடங்கும் திருக்குறளை அடி பிறளாமல் எழுதுக.
6) "சேக்கிழார்,சீத்தலை சாத்தனார்" பற்றி குறிப்பு வரைக.
7) இரட்டை கிளவி மற்றும் அடுக்குதொடர் - வேறுபாடுகளை கூறு.
8) வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன?
9) மழை எவ்வாறு பொழிகிறது?
10) சிறுநீரகத்தின் படம் வரைந்து பாகம் குறி..


பதிவு பிடித்திருந்தால் தமிழிஷில் ஓட்டளியுங்கள். மேலும் நீங்களும் கேள்விகளை சேர்க்கலாம். :)

யு எஸ் பி டிரைவ் பாதுகாப்பு

கம்ப்யுட்டரில் நம்மில் பலர் சந்திக்கும் பிரச்சனை வைரஸ். இன்டர்நெட் இணைப்பு இல்லாதவர்களுக்கு எக்ஸ்டெர்னல் மீடியா க்களான பென் டிரைவ்,சிடி,டிவி டி,பிளாப்பி க்களின் மூலம் வைரஸ் பரவுகிறது.பென் டிரைவ் ஆனது இப்போது அதிக அளவு பயன் படுத்த படுவதனால் இதன் மூலம் வைரஸ் பரவுவதை எப்படி தடுக்கலாம் என பார்க்கலாம்.





வலையில் தேடியதில் "நின்ஜா பென் டிஸ்க்!" என்ற சாப்ட்வேர் ஆனது கிடைத்தது. இது பயன்படுத்துவதற்கு மிக எளிமையானது. மேலும் இது போர்டபிள் என்பதால் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


இதை எப்படி பயன் படுத்துவது என பார்ப்போம்.

- இந்த லிங்க் கில் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
- இது போர்டபிள் என்பதால் தரவிறக்கம் செய்தவுடம் ரன் செய்தல் மட்டும் போதுமானது.உடனே இது டிரேயில் வந்து அமர்து கொள்ளும்.
- அதனை வலது கிளிக் செய்து "Add to startup" என்பதை தெரிவு செய்யவும்.



இனி எந்த ஒரு பென் ட்ரைவினை உங்கள் கம்ப்யூட்டர் உடன் இணைத்தாலும் இது ஸ்கேன் செய்தவுடன் தான் பயன்படுத்த அனுமதிக்கும்.



தள முகவரி : http://nunobrito.eu/ninja/

இந்த பதிவு பிடித்திருந்தால் தமிழிஷில் ஓட்டளிக்கலாம்.

தீராத விளையாட்டு பிள்ளை

நடிகர் விஷால், தோரணை படத்திற்கு பின் நடிக்கவிருக்கும் படம் தீராத விளையாட்டு பிள்ளை. படத்தின் பெயரை பார்த்தாலே இது ஒரு "நான் அவனில்லை" டைப் படம் போல தான் தெரிகின்றது. இந்த படத்தை திரு என்ற புது டைரக்டர் இயக்குகிறார்.




இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.மேலும் இந்த படத்தில் ஆக்ஷ்ன் கிடையாது என்பது விஜய் க்கு சந்தோசத்தை கொடுக்கலாம்.


பாடலைக் கேட்க:





பி.கு :
"சத்யம்" மா நான் விஷால் ரசிகன் இல்லீங்கோ :)

கௌதம்-சிம்பு-A.R ரஹ்மான் இணையும் புதிய படம்

கௌதம் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி முறிவிற்கு பின் கௌதம் இயக்கம் படம் "விண்ணை தாண்டி வருவாயா". முதன் முறையாக AR ரஹ்மானுடன் சேரும் கௌதம் சிம்புவையும் தனது கூட்டணியில் இணைத்துள்ளார். மற்ற படி தாமரையே இந்த படத்திற்கும் பாடல்களை எழுதவுள்ளார். த்ரிஷா சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

லேட்டஸ்ட் பட ஆல்பம் கீழே.




























தமிழிஷில் ஓட்டளிக்க :

நான் கடவுள் - பூஜா "நடித்த" முதல் தமிழ் படம்

நான் கடவுள் படத்திற்கு எந்த ஒரு எதிர்பார்பும் இல்லாமல் மாயாஜால் திரையரங்கிற்கு நண்பனின் வற்புறுத்தலால் செல்ல நேர்ந்தது. பாலா என்ற கலைஞனை பிடித்தாலும், அஜித்துடன் நான் கடவுள் பட ஆரம்ப வேளையில் ஏற்பட்ட பிரச்சினையின் போது கொஞ்சம் மட்டமாக (அடியாள் மூலம்) நடந்து கொண்டார் என்பதற்காக இந்த படம் பார்க்க கூடாது என்று இருந்தேன். நண்பனின் வற்புறுத்தலால் பார்க்க நேர்ந்தது. ரொம்ப அதிகமான ஷோ திரையிட்டதால் மாலை 5 மணி ஷோ வில் டிக்கெட் எளிதாக கிடைத்தது.
படத்தை பற்றி வலை பதிவர்கள் ஏற்கனவே அலசி ஆராய்ந்து விட்டதால் ஒரு சில விஷயங்களை மட்டும் பதிய ஆசை படுகிறேன்.



ஆர்யா:

காசியில் படம் ஆரம்பிக்கும் போதே பாலா நம்மை நம் பார்க்காத வேறு ஒரு உலகிற்கு கொண்டு சென்று விடுகிறார். ஆர்யாவின் அறிமுக காட்சிகள் நம்மை மிரள வைக்கின்றன. இந்த கேரக்டர் ஆனது பிதாமகன் படத்தின் விக்ரமை நினைவுபடுத்தினாலும் ஆர்யா முந்தைய சாக்லேட் பாய் இமேஜ் ஐ விட்டு வெளியே வந்து புது ரூட் கு உதவியுள்ளது. சூர்யா க்கு ஒரு நந்தா என்றால் ஆர்யாவுக்கு நிச்சயமாக "நான் கடவுள்" கை கொடுக்கும். தலை கீழாக அவர் சிரசாசனம் செய்யும் காட்சிகளில் விசில் பறக்கிறது. அஜித் இந்த அளவுக்கு நடித்திருப்பாரா என்பது சந்தேகமே.

பூஜா:
பாவனா,மீனாக்ஷி,பார்வதி, தூத்துகுடி கார்த்திகா நடிப்பதாக இருந்து கடைசியாக பூஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.கண் தெரியாத வேடத்தில் நடித்த இந்த படத்திற்காக இவருக்கு நிச்சயம் அவார்ட் கிடைப்பது உறுதி. பருத்திவீரன் ப்ரியாமணியை விட நன்றாகவே நடித்து ஸ்கோர் செய்துள்ளார். அதுவும் கிளைமாக்ஸ் காட்சியின் ஐந்து நிமிடங்களும் பட்டையை கிளப்பியிருப்பார்...இதுவரை வந்த பாலா படங்களில் ஹீரோயினுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம்,பாராட்டு கிடைத்திருக்காது. வில்லனிடம் அடி வாங்க முடியாமல் கடவுளிடம்(ஆர்யா அல்ல) மன்றாடுவதும் , கடைசியில் ஆர்யாவை தேடி வந்து பேசும் வசனங்களும் படத்திற்கு பலம். ஜெயமோகன் தன் பணியை நன்றாகவே செய்துள்ளார்.

வில்லன்:

ஹீரோவை காசியில் காட்டும் போது வில்லன், பிச்சை காரர்களை வைத்து தொழில் செய்வதாக தமிழ் நாட்டில் காட்டுகிறார்கள். அவர்கள் படும் துன்பங்களை காட்டும் ஆரம்ப காட்சிகளை பார்க்க முடியாமல் படத்தை விட்டு எழுந்து சென்று விடலாம் என கூட நினைத்தேன்.அந்த அளவுக்கு வில்லன்(அறிமுகம்) கொடுமை படுத்துவதாக காண்பிப்பார்கள்.வசன உச்சரிப்பிலும் உருவத்திலும் நன்றாக மிரட்டுகிறார். நல்ல வேலை பிரகாஷ் ராஜ், சுமன், ஆஷிஷ் வித்யார்த்தி என்று போடவில்லை.



அஜீத்(?) :
இந்த கதையில் நடிக்காமல் (தலை) தப்பினார்.

மற்றவர்கள்:

நான்கு ஜோதிடர்களின் கணிப்பால் காசியில் தொலைத்த தனது பையனை தேடி வரும் அப்பாவாக மஹாதேவன் (பிதாமகன் வில்லன்) . தேடி வந்த இடத்தில் அங்கு இருக்கும் புரோகிதரிடம் திட்டு வாங்கும் போது நன்கு நடித்துள்ளார்.
அம்மா கதாபாத்திரத்திற்கு எப்போதுமே ஆர்யா வை நினைத்து அழும் வேடம். ஒரு தங்கையும் இருக்கிறார்.

அனைத்து பிச்சைக்காரர்கள் படும் (பெரியவர் முதல் சிறுவர்கள் வரை) கொடுமைகளுடன் ஆரம்பித்து, செல்ல செல்ல அவர்களுக்குள்ளேயே நடக்கும் காமெடி, அசா பாசங்களை நன்றாக காண்பிப்பார்கள். அதுவும் ஒரு சிறுவன் "அம்பானி" பற்றி சொல்லும்போது த்யேட்டரில் அனைவரும் ரசிப்பது நிஜம்.


சமூகத்தை சீரழிப்பவர்களின் மரணம் தண்டனையாகவும், கஷ்டப்பட்டு முடியாதவர்களின் மரணம் அவர்களே வரமாகக் கொள்ள வேண்டும் என குரு சொன்ன வேத வாக்கை படத்தில் ஆர்யா என்ன செய்கிறார் என்பதே பாலாவின் "நான் கடவுள்" .

கண்டிப்பாக ஒரு தடவை (மட்டும்) தியேட்டரில் பார்க்க வேண்டிய நல்ல படம்.

கந்தசாமி - லேட்டஸ்ட் ஆல்பம்

சமீபத்தில் கந்தசாமி படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..































மேலும் கந்தசாமி படத்தில் விக்ரம் ஒரு பாட்டும் பாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் கீழே...