காதல் கவிதை???

அடக்கம் என்பதை பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன்..
ஆனால் பார்த்தது உன் வடிவில்தான்.!

எப்போதும் சுறுசுறுப்பை தேடி அலையும் நான் புத்துணர்வை உணர்கின்றேன்.
உன்னை பார்த்த அந்த காலை பொழுதில்.

ஆனால் பெண்ணே!!!
என்னை பார்த்து நேருக்கு நேர் சிரிக்காதே!!! உன் சிரித்த முகத்தினை பார்த்தவுடன் என் இதயத்தின் அதிர்வுகளை கேட்டு அதிர்ந்து நிற்கின்றேன்..

இதுதான் காதலென்று உணர நான் ஒன்றும் காதல் இலக்கியம் படித்தவனல்ல..
எனக்குள் இருந்த கவிஞன்(?) வெளிப்பட்டான்,

அன்பே உன் மூலமாக...

குறிப்பு:
இது தான் வாழ்க்கையில் முதன் முதலாக எழுதும் கவிதை.. தவறிருந்தால் மன்னிக்கவும். :-)

பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில்ஓட்டை பதியுங்கள். நன்றி...