ஆஸ்கர் தமிழன் சென்னையில் :படங்கள்

ஒரே படத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற முதல் இந்தியரான,தமிழரான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. (விஜய்,ஷங்கருக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கும் சத்யபாமா போன்ற பல்கலைகழகங்கள் இவரை விட்டுவிட்டால் தேவலை. அவர்களோடு இவரையும் சேர்க்க வேண்டாம்). இன்று சென்னை வந்த ஏ.ஆர்.ஆருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பட்டது.

புகைப்படங்கள் கீழே..


தமிழனாக பிறந்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாக ஆஸ்கர் நாயகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.இதே கருத்தை மும்பையிலும் கூறுவார் என நம்பலாம்.

புகழ் வரும்போது மனிதர்கள் எல்லாவற்றையும் மறப்பார்கள். ஆனால் நம் இசை புயல் இறைவனை,அம்மாவை,தமிழை நினைத்து இருப்பது நம் அனைவருக்கும் பெருமை.
மென்மேலும் விருதுகள் பெற வாழ்த்துவோம்.

பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்க கூடாத பத்து கேள்விகள்

வலைப்பதிவுலகில் உள்ள பதிவர்களில் 10 கேள்விகள் கேட்காத ஆட்களே இல்லை. மீதமுள்ளோர் யார் என்று பார்த்தால் பத்தாம் வகுப்பு மாணவர்களும்,பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் மட்டுமே... ("ப"வுக்கு "பா". :-) ). எனவே 1998 பத்தாம் வகுப்பில் படித்ததை ரூம் போட்டு யோசித்ததில் உதித்தவைகள் இவைகள்...

இந்த 10 கேள்விகள் கான்செப்ட்டை ஆரம்பித்தவர் பொறுத்தருள்க...1) சிவப்பு பாஸ்பரஸிர்கும்,வெண் பாஸ்பரஸிர்கும் உள்ள வேற்றுமைகள் என்ன?
2) நாலடியார் குறிப்பு வரைக
3) உங்கள் ஊரில் உள்ள குடிநீர் பிரச்சினையை போக்க உங்கள் மாவட்ட கலெக்டருக்கு மடல் வரைக..
4) நீ முதலமைச்சராக வந்தால் என்னன்ன செய்வாய் என கற்பனை கட்டுரை வரைக...
5) "அகர" என தொடங்கும் திருக்குறளை அடி பிறளாமல் எழுதுக.
6) "சேக்கிழார்,சீத்தலை சாத்தனார்" பற்றி குறிப்பு வரைக.
7) இரட்டை கிளவி மற்றும் அடுக்குதொடர் - வேறுபாடுகளை கூறு.
8) வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன?
9) மழை எவ்வாறு பொழிகிறது?
10) சிறுநீரகத்தின் படம் வரைந்து பாகம் குறி..


பதிவு பிடித்திருந்தால் தமிழிஷில் ஓட்டளியுங்கள். மேலும் நீங்களும் கேள்விகளை சேர்க்கலாம். :)

யு எஸ் பி டிரைவ் பாதுகாப்பு

கம்ப்யுட்டரில் நம்மில் பலர் சந்திக்கும் பிரச்சனை வைரஸ். இன்டர்நெட் இணைப்பு இல்லாதவர்களுக்கு எக்ஸ்டெர்னல் மீடியா க்களான பென் டிரைவ்,சிடி,டிவி டி,பிளாப்பி க்களின் மூலம் வைரஸ் பரவுகிறது.பென் டிரைவ் ஆனது இப்போது அதிக அளவு பயன் படுத்த படுவதனால் இதன் மூலம் வைரஸ் பரவுவதை எப்படி தடுக்கலாம் என பார்க்கலாம்.

வலையில் தேடியதில் "நின்ஜா பென் டிஸ்க்!" என்ற சாப்ட்வேர் ஆனது கிடைத்தது. இது பயன்படுத்துவதற்கு மிக எளிமையானது. மேலும் இது போர்டபிள் என்பதால் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


இதை எப்படி பயன் படுத்துவது என பார்ப்போம்.

- இந்த லிங்க் கில் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
- இது போர்டபிள் என்பதால் தரவிறக்கம் செய்தவுடம் ரன் செய்தல் மட்டும் போதுமானது.உடனே இது டிரேயில் வந்து அமர்து கொள்ளும்.
- அதனை வலது கிளிக் செய்து "Add to startup" என்பதை தெரிவு செய்யவும்.இனி எந்த ஒரு பென் ட்ரைவினை உங்கள் கம்ப்யூட்டர் உடன் இணைத்தாலும் இது ஸ்கேன் செய்தவுடன் தான் பயன்படுத்த அனுமதிக்கும்.தள முகவரி : http://nunobrito.eu/ninja/

இந்த பதிவு பிடித்திருந்தால் தமிழிஷில் ஓட்டளிக்கலாம்.

தீராத விளையாட்டு பிள்ளை

நடிகர் விஷால், தோரணை படத்திற்கு பின் நடிக்கவிருக்கும் படம் தீராத விளையாட்டு பிள்ளை. படத்தின் பெயரை பார்த்தாலே இது ஒரு "நான் அவனில்லை" டைப் படம் போல தான் தெரிகின்றது. இந்த படத்தை திரு என்ற புது டைரக்டர் இயக்குகிறார்.
இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.மேலும் இந்த படத்தில் ஆக்ஷ்ன் கிடையாது என்பது விஜய் க்கு சந்தோசத்தை கொடுக்கலாம்.


பாடலைக் கேட்க:

பி.கு :
"சத்யம்" மா நான் விஷால் ரசிகன் இல்லீங்கோ :)

கௌதம்-சிம்பு-A.R ரஹ்மான் இணையும் புதிய படம்

கௌதம் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி முறிவிற்கு பின் கௌதம் இயக்கம் படம் "விண்ணை தாண்டி வருவாயா". முதன் முறையாக AR ரஹ்மானுடன் சேரும் கௌதம் சிம்புவையும் தனது கூட்டணியில் இணைத்துள்ளார். மற்ற படி தாமரையே இந்த படத்திற்கும் பாடல்களை எழுதவுள்ளார். த்ரிஷா சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

லேட்டஸ்ட் பட ஆல்பம் கீழே.
தமிழிஷில் ஓட்டளிக்க :

நான் கடவுள் - பூஜா "நடித்த" முதல் தமிழ் படம்

நான் கடவுள் படத்திற்கு எந்த ஒரு எதிர்பார்பும் இல்லாமல் மாயாஜால் திரையரங்கிற்கு நண்பனின் வற்புறுத்தலால் செல்ல நேர்ந்தது. பாலா என்ற கலைஞனை பிடித்தாலும், அஜித்துடன் நான் கடவுள் பட ஆரம்ப வேளையில் ஏற்பட்ட பிரச்சினையின் போது கொஞ்சம் மட்டமாக (அடியாள் மூலம்) நடந்து கொண்டார் என்பதற்காக இந்த படம் பார்க்க கூடாது என்று இருந்தேன். நண்பனின் வற்புறுத்தலால் பார்க்க நேர்ந்தது. ரொம்ப அதிகமான ஷோ திரையிட்டதால் மாலை 5 மணி ஷோ வில் டிக்கெட் எளிதாக கிடைத்தது.
படத்தை பற்றி வலை பதிவர்கள் ஏற்கனவே அலசி ஆராய்ந்து விட்டதால் ஒரு சில விஷயங்களை மட்டும் பதிய ஆசை படுகிறேன்.ஆர்யா:

காசியில் படம் ஆரம்பிக்கும் போதே பாலா நம்மை நம் பார்க்காத வேறு ஒரு உலகிற்கு கொண்டு சென்று விடுகிறார். ஆர்யாவின் அறிமுக காட்சிகள் நம்மை மிரள வைக்கின்றன. இந்த கேரக்டர் ஆனது பிதாமகன் படத்தின் விக்ரமை நினைவுபடுத்தினாலும் ஆர்யா முந்தைய சாக்லேட் பாய் இமேஜ் ஐ விட்டு வெளியே வந்து புது ரூட் கு உதவியுள்ளது. சூர்யா க்கு ஒரு நந்தா என்றால் ஆர்யாவுக்கு நிச்சயமாக "நான் கடவுள்" கை கொடுக்கும். தலை கீழாக அவர் சிரசாசனம் செய்யும் காட்சிகளில் விசில் பறக்கிறது. அஜித் இந்த அளவுக்கு நடித்திருப்பாரா என்பது சந்தேகமே.

பூஜா:
பாவனா,மீனாக்ஷி,பார்வதி, தூத்துகுடி கார்த்திகா நடிப்பதாக இருந்து கடைசியாக பூஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.கண் தெரியாத வேடத்தில் நடித்த இந்த படத்திற்காக இவருக்கு நிச்சயம் அவார்ட் கிடைப்பது உறுதி. பருத்திவீரன் ப்ரியாமணியை விட நன்றாகவே நடித்து ஸ்கோர் செய்துள்ளார். அதுவும் கிளைமாக்ஸ் காட்சியின் ஐந்து நிமிடங்களும் பட்டையை கிளப்பியிருப்பார்...இதுவரை வந்த பாலா படங்களில் ஹீரோயினுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம்,பாராட்டு கிடைத்திருக்காது. வில்லனிடம் அடி வாங்க முடியாமல் கடவுளிடம்(ஆர்யா அல்ல) மன்றாடுவதும் , கடைசியில் ஆர்யாவை தேடி வந்து பேசும் வசனங்களும் படத்திற்கு பலம். ஜெயமோகன் தன் பணியை நன்றாகவே செய்துள்ளார்.

வில்லன்:

ஹீரோவை காசியில் காட்டும் போது வில்லன், பிச்சை காரர்களை வைத்து தொழில் செய்வதாக தமிழ் நாட்டில் காட்டுகிறார்கள். அவர்கள் படும் துன்பங்களை காட்டும் ஆரம்ப காட்சிகளை பார்க்க முடியாமல் படத்தை விட்டு எழுந்து சென்று விடலாம் என கூட நினைத்தேன்.அந்த அளவுக்கு வில்லன்(அறிமுகம்) கொடுமை படுத்துவதாக காண்பிப்பார்கள்.வசன உச்சரிப்பிலும் உருவத்திலும் நன்றாக மிரட்டுகிறார். நல்ல வேலை பிரகாஷ் ராஜ், சுமன், ஆஷிஷ் வித்யார்த்தி என்று போடவில்லை.அஜீத்(?) :
இந்த கதையில் நடிக்காமல் (தலை) தப்பினார்.

மற்றவர்கள்:

நான்கு ஜோதிடர்களின் கணிப்பால் காசியில் தொலைத்த தனது பையனை தேடி வரும் அப்பாவாக மஹாதேவன் (பிதாமகன் வில்லன்) . தேடி வந்த இடத்தில் அங்கு இருக்கும் புரோகிதரிடம் திட்டு வாங்கும் போது நன்கு நடித்துள்ளார்.
அம்மா கதாபாத்திரத்திற்கு எப்போதுமே ஆர்யா வை நினைத்து அழும் வேடம். ஒரு தங்கையும் இருக்கிறார்.

அனைத்து பிச்சைக்காரர்கள் படும் (பெரியவர் முதல் சிறுவர்கள் வரை) கொடுமைகளுடன் ஆரம்பித்து, செல்ல செல்ல அவர்களுக்குள்ளேயே நடக்கும் காமெடி, அசா பாசங்களை நன்றாக காண்பிப்பார்கள். அதுவும் ஒரு சிறுவன் "அம்பானி" பற்றி சொல்லும்போது த்யேட்டரில் அனைவரும் ரசிப்பது நிஜம்.


சமூகத்தை சீரழிப்பவர்களின் மரணம் தண்டனையாகவும், கஷ்டப்பட்டு முடியாதவர்களின் மரணம் அவர்களே வரமாகக் கொள்ள வேண்டும் என குரு சொன்ன வேத வாக்கை படத்தில் ஆர்யா என்ன செய்கிறார் என்பதே பாலாவின் "நான் கடவுள்" .

கண்டிப்பாக ஒரு தடவை (மட்டும்) தியேட்டரில் பார்க்க வேண்டிய நல்ல படம்.

கந்தசாமி - லேட்டஸ்ட் ஆல்பம்

சமீபத்தில் கந்தசாமி படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..மேலும் கந்தசாமி படத்தில் விக்ரம் ஒரு பாட்டும் பாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் கீழே...