கண்டிப்பாக பார்த்திருக்கவே கூடாத படங்கள்:

98 க்கு பின் தான் (அதாவது பத்தாவது முடித்து பாலி. சேர்ந்த பின்) நான் தியேட்டருக்கு சென்று நண்பர்களுடன் பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் கல்லூரி காலத்தில் ஒரு படம் விடாமல் பார்ப்பதுண்டு.

போன வாரம் மோதி விளையாடு படம் பார்த்து இது போல வேறு எந்த படத்திற்கு விமர்சனமே பார்க்காமல் போய் மொக்கை வாங்கி வந்தோம் என உட்கார்ந்து யோசித்ததில் கீழ்கண்ட படங்கள் ஞாபகத்திற்கு வந்தன.

இவையாவும் நான் தியேட்டரில் முதல் வாரமே பார்த்தவை...டிவியில் பார்த்ததையும் சேர்த்தால் லிஸ்ட் போய் கொண்டே இருக்கும். ;-)


1.டைம்:

பிரபு தேவா, சிம்ரன் மற்றும் ராதிகா சவுத்ரி நடித்த இந்த படம் 1999 ம் ஆண்டில் வெளி வந்தது. சிம்ரன் படங்களை விரும்பி பார்ப்பேன் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனேன். இப்படத்தில் இளையராஜா பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.

ஆனால் என்ன செய்ய, என் டைம் சரியில்லை போல.மட்டமான திரைக்கதை. திருச்சியில் ஒரு வாரமோ பத்து நாளோ தான் படம் ஓடியது.

2.பார்வை ஒன்றே போதுமே:

2001ல் வெளி வந்த இந்த படத்தில் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது அனைவரும் அரிந்ததே.அறிமுக இயக்குனர் பரணி அருமையாக இசையமைத்திருப்பார். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாடல்களுக்காகவே இந்த படத்திற்கு சென்றோம். முக்கோண காதல் கதை. பாடல்களும்,அவை ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதமும் நன்றாக இருந்தாலும் மட்டமான திரைகதையில் இடைசொறுகலாகவே இவை இருந்தன. இதே வருடம் வெளிவந்த “மின்னலேஎனக்கு ரொம்ப பிடித்திருந்தது.


இந்த படம் flop ஆன போதிலும் இதே கூட்டணி “பேசாத கண்ணும் பேசுமேஎன்ற படத்தையும் எடுத்த்தது. ஆனால் பாடல்கள் கூட இதில் கைகொடுக்கவில்லை.

3.ஸ்டார்:

ஜோடி பாதிப்பில் ப்ரவீன்காந்தை நம்பி சென்ற படம். ம்ம்ம்..மற்ற படி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

மோதி விளையாடு கதை இதனுடன் ஒத்து இருக்கும்.

4. ராஜா:

முடிந்த வரை தல படத்தை சீக்கிரமே பார்த்து விடுவேன். எழிலின் முந்தைய படமான “பூ.உ.வாநன்றாக இருந்தது. ஆனால் “ஜோவை இந்த படத்தில் சரியாக பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.


அதே போல் தலைக்கும் பெருசா ஆக்சன் எதுவும் இருக்காது.வடிவேலு காமெடியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது.இது வெளிவந்தது 2002 ம் ஆண்டு.

5.ட்ரீம்ஸ்

துள்ளுவதோ இளமை வெற்றி, கஸ்தூரி ராஜாவை அதே பாணியில் இன்னொரு படம் எடுக்க தூண்டியிருக்கும் போல. தனுஷ்,தியா வை வைத்து இந்த படத்தை எடுத்திருந்தார்.2004ல் வெளியானது. அப்போது தான் நான் சென்னை வந்த சமயம்.


பாடல்கள்,திரைக்கதை அனைத்தும் மோசம்.இதில் டபுள் மீனிங் வசனங்கள் வேறு. இதே கால கட்டத்தில் அப்போது வெளியான சிம்புவின் மன்மதன் சூப்பர் ஹிட்.

6.பெப்ரவரி 14

2005ல் இந்த படம் வெளியாகும் முன்பு ஆ.வி,குமுதம் போன்றவற்றில் ரொம்பவெ பில்டப் கொடுத்திருந்ததால் இந்த படத்தை பார்க்க சென்றேன்.


சிறுவன் கார்டூன் கேரக்டரில் வருவது புதுமையாக இருந்தாலும், திரைக்கதை ரொம்ப மெதுவாக சென்றதால் நான் என் நண்பர்களுடன் வெளியெறிவிட்டேன்.

7.இதய திருடன்:

ஜெயம் ரவி+காம்னா+சரண் போன்ற இளமை கூட்டணிக்காகவே முதல் நாள் முதல் ஷோ உதயம் தியேட்டர் சென்றேன்.


படம் செம போர். இதில் ப்ரகாஷ் ராஜை வீணடித்திருப்பார்கள்.

8.ஜி:

தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த ‘தலக்கு இந்த படம் கை கொடுக்கும் என நினைத்திருந்தேன். இதில் லிங்குசாமி டைரக்டர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பாடல்கள் வேறு எனக்கு பிடித்திருந்ததால் முதல் நாளே சென்றேன்.


படக்காட்சிகள் ஆயுத எழுத்து படத்தை ஒத்திருந்ததால் படம் பிடிக்கவில்லை.திரைக்கதையும் ரொம்ப ஸ்லோ.

9.ஆழ்வார்:

வரலாறு படத்தில் நடித்து தன் பழைய ஃபார்முக்கு தல திரும்பியிருந்தது இந்த படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த்தது. போதாததிற்கு அசின் ஹீரோயின்.

எதிர்பார்ப்புடன் தியேட்டர் சென்றால்,பழைய குருடி,கதவை திரடி என்பது போல் உப்பு சப்பில்லாத பழிவாங்கும் ப்ழைய பார்முலா கதை.

2007 ல் வெளிவந்த இந்த படம் அஜீத் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.


10.இந்திரலோகத்தில் நா.அழகப்பன்:

இம்சை அரசன் எனக்கு ரொம்ப பிடித்த ப்டம்.சிம்பு தேவன் வரலாற்றுடன் இன்றைய அரசியல்,அரசு அலுவலர்களை நன்றாக ஒரு பிடி பிடித்திருப்பார்.வடிவேலுவும் செமயா நடித்திருப்பார்.

எனவே வ்டிவேலு இதிலும் கலக்கியிருப்பார் என்று சென்றால் காதில் ரத்தம் வராத குறையாக காமெடி என்ற பெயரில் கடித்து குதரியிருப்பார்கள்.


ம்ம்ம்...எப்படித்தான் கேபிள்சங்கர்,கார்த்திகை பாண்டியன்,ஜெட்லீ போன்றோர்களால் முதல் நாளே மொக்கை படங்களை பார்க்க முடிகின்றதோ தெரியவில்லை :-))


இதையெல்லாம் வைத்து நான் சீக்கிரமே தியேட்டரில் படம் பார்த்தால் படம் ஊத்திக்கொள்ளும் என நினைக்க வேண்டாம்.


டிஸ்கி:

இளைய தளபதியின் படங்களை தேட வேண்டாம். அவரின் படங்களை ரெவியூ பார்த்தாலும் தியேட்டரில் போய் பார்ப்பது கிடையாது (நன்றி : புதிய கீதை)


பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில்ஓட்டை பதியுங்கள். நன்றி...