நந்தலாலா ஆடியோ விமர்சனம்


நந்தலாலா விமர்சனம்- ஆடியோ


மிகவும் எதிர்பார்புகளுக்கு இடையில் இளைய ராஜா , மிஷ்கின் கூட்டணியில ஜனவரி 24 லில் ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் "நந்தலாலா" படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.படத்தின் 5 பாடல்களுமே ஹிட் ரகம் தான்.

ஏல, எழில (?)... பாடியவர் : சரோஜா அம்மாள்
இந்த பாடலில் உள்ள வரிகள் எதுவும் விளங்கவில்லை. இதுதான் படத்தின் தீம் ஹைலைட்டான பாடல் என கோலிவுட்டில் பேச்சு நிலவினாலும் பெரிதாக நம்மை ஈர்க்கவில்லை.
கை வீசி நடக்கிற காத்தே ... பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ் , ஸ்வேதா , மது பாலகிருஷ்ணன் , ராகுல் , சந்திரசேகர் எழுதியவர் : பழனிபாரதி
பிதாமகன் படத்தின் "இளங்காத்து வீசுதே" எப்படி நமது மனதை வருடியதோ அதே போல இந்த பாடலும் நமது மனதை கொள்ளை கொள்ள செய்கிறது.மெல்ல ஊர்ந்து ஊர்ந்து : பாடியவர் : இளைய ராஜா, எழுதியவர் :நா முத்துகுமார்
மெதுவாக ஆரம்பிக்கும் மெலடியான இந்த பாடல் உடனடியாக நம் மனதில் ஒட்டாவிட்டாலும் கேட்க கேட்க நன்றாக உள்ளது. ராஜாவின் வாய்ஸ் தான் முன்பு போல இல்லாமல் என்னமோ செய்கிறது.


தாலாட்டு கேட்க : பாடியவர் : இளைய ராஜா எழுதியவர் :முத்துலிங்கம்
சோக பாடலான இந்த பாடல் தான் இந்த பாடலில் 90 களில் கேட்ட பழைய இளையராஜா
நம் கண் முன்னால் வந்து அசத்தியுள்ளார்.
ஒரு வாண்டு கூட்டமே ...
பாடியவர் : இளைய ராஜா, மாஸ்டர் யதீஸ்வரன்
எழுதியவர்: கபிலன்

இளையராஜா மாஸ்டர் யதீஸ்வரனுடன் இணைந்து பாடியுள்ள மற்றுமொரு பாடல். கேட்டவுடனே ஒட்டிக்கொள்ளும் பாடல் இது.


அக மொத்தம் ,
இந்த ஆல்பம் முழுவதிலும் இளையராஜா வேறு பாடகர்களுக்கு சான்ஸ் கொடுக்காமல் இவரே பல பாடல்களை படி ஹிட்டும் ஆக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும் .நான் கடவுள் ஆல்பத்தில் அவ்வளவாக கவராத இளையராஜா இதில் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார் என்றால் அது மிகையில்லை.

டோட்டல் ரேடிங் :
டிரைலர்

கீழே ஓட்டளியுங்கள் நண்பர்களே...மறவாமல் பின்னுட்டமிடுங்கள் .

0 comments:

Post a Comment