நினைத்தாலே இனிக்கும் - இசை விமர்சனம்

தலைவர் ரஜினியும் உலக நாயகன் கமலும் சிறு வயதில் இணைந்து நடித்து சக்கை போடு போட்ட படமான "நினைத்தாலே இனிக்கும்" படத்தின் டைட்டிலையும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படமான "க்ளாஸ் மேட்ஸ்" இன் தமிழ் பதிப்பே இந்த "புது" நி..




இதில் ப்ரித்விராஜ், ஷக்தி,ப்ரியாமணி மற்றும் கார்த்திக் குமார் நடித்துள்ளனர்.G.N.R. குமாரவேலன் எனும் புதுமுகம் இயக்க நம்ம நாக்க மூக்க புகழ் "விஜய் ஆண்டனி" இசையமைத்துள்ளார்.






இதில் மொத்தம் உள்ள 7 பாடல்களில் 2 பாடல்களை விஜய் ஆண்டனியே பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. அழகாய் பூக்குதே:
பாடியது : பிரசன்னா, ஜானகி அய்யர் பாடலாசிரியர் : கலை குமார்
மெலடி பாடலான இந்த பாடல முதல் முறை கேட்டதுமே மனதில் ஒட்டிக்கொள்கிறது. கண்டிப்பாக ஹிட்டாகக்கூடிய பாடல். ஜானகியின் குரல் கேட்க நன்றாக உள்ளது.

2. என் பேரு முல்லா:
பாடியது :விஜய் ஆண்டனி & குழுவினர் பாடலாசிரியர் : அண்ணாமலை
நக்கமுக்க, ஆத்திச்சூடி போல வழக்கமான விஜய் ஆண்டனி ஸ்பெஷல் ஜாலி பாடல். அவரே அவரது ஹாய் பிட்ச் குரலில் பாடியிருக்கிறார். அனால் இதில் ஆத்திச்சூடி பாட்டின் வாடை வீசுவதை மறுக்க முடியாது.


3. நாட்கள் நகர்ந்து …
பாடியது :கவுசிக் & குழுவினர் பாடலாசிரியர் : பிரபா
இதோ நட்பை பற்றி முழுவதாக விளக்கும் மற்றொரு பாடல் வந்தாச்சு...கேட்க இனிமையாக இருக்கிறது.ஆனால் ஒரு நிமிஷம் மட்டுமே வரும் பிட் சாங் :(.


4. பியா… பியா...
பாடியது :விஜய் ஆண்டனி & குழுவினர் பாடலாசிரியர் : அண்ணாமலை
மற்றுமொரு விஜய் அந்தோனி ஸ்பெஷல் சாங்.கண்டிப்பாக FM ரேடியோக்களில் தினமும் ஒலிக்கக்கூடிய பாடல்.மெதுவாக ஆரம்பித்து போக போக பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதுவும் பியா பியா எனும்போது கேட்க நன்றாக உள்ளது.ஆனால் பாட்டு ஆரம்பிக்கும் போது உள்ள "tune" சுக்ரன் படத்தில் உள்ள சாத்திக்கடி போத்திக்கடி பாடலின் tune போலவே உள்ளது.

5. நண்பனை பார்த்த
பாடியது :பென்னி தயாள் & குழுவினர் பாடலாசிரியர் : அண்ணாமலை
இந்த ஆல்பத்தில் உள்ள நட்பினை போற்றும் மற்றுமொரு பாடல். கேட்க இதமாக உள்ளது.

6. செக்ஸி லேடி
பாடியது :M.K. பாலாஜி,ஷீபா, மாயா,ரம்யா & குழுவினர் பாடலாசிரியர் : பிரியன்
இந்த பாடல் வழக்கமான பாடல் போலத்தான் உள்ளது.அவ்வளவாக திரும்ப திரும்ப கேட்க முடியவில்லை.

7. கல்லூரி
பாடியது :ஷீபா பாடலாசிரியர் : ஷீபா
இன்னொரு bit பாடல். OK ரகம் தான்.


எனக்கு பிடித்த பாடல்களின் வரிசை.
1. அழகாய் பூக்குதே:
2. பியா… பியா...
3. நாட்கள் நகர்ந்து …
4. என் பேரு முல்லா
5. நண்பனை பார்த்த
6. செக்ஸி லேடி
7. கல்லூரி


பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் ஓட்டை பதியுங்கள். நன்றி...

10 comments:

Anonymous said...

நானும் கேட்டேன்...மூன்று பாடல்கள் அருமை..

- குமாரவேல்,பாஸ்டன்

கார்த்திகைப் பாண்டியன் said...

கேட்டுருவோம்.. அடிக்கடி எழுதுங்க நண்பா

சம்பத் said...

////நானும் கேட்டேன்...மூன்று பாடல்கள் அருமை..

- குமாரவேல்,பாஸ்டன்////

Thanks to குமாரவேல்

சம்பத் said...

////கார்த்திகைப் பாண்டியன் Says:
July 19, 2009 3:14 AM

கேட்டுருவோம்.. அடிக்கடி எழுதுங்க நண்பா/////

வருகைக்கு நன்றி நண்பா....கண்டிப்பாக எழுதுவேன் நண்பா.... கடந்த 3 மாதங்களாக வேலைப்பளு காரணமாக அதிகமாக எழுத முடியவில்லையே தவிர தங்களின் பதிவுகளை மறக்காமல் படித்து வருகிறேன்...ஆதரவிற்கு நன்றி..

Anonymous said...

ஹாய் சம்பத்,

நலமா?உங்களின் எழுத்து தமிழ் மிகவும் அழகாக உள்ளது.உங்களின் விமர்சனத்தை பார்த்து பாடல்கள் கேட்டேன்."நாட்கள்..."பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

சம்பத் said...

அம்மு,
நான் நலம்...
முதல் வருகைக்கு நன்றி...நேரம் கிடைக்கும் பொது அப்பப்ப வாங்க...

குறை ஒன்றும் இல்லை !!! said...

கவுண்டர் : எனக்கு பாட்டு கேட்குற அளவுக்கு ஞானம் இல்லீங்க.. ஆனா அடிக்கடி வந்து போறேன்.. ஏன்னா உங்கள இன்னிலேருந்து விடாம துரத்தரேன் !!!

சம்பத் said...

///குறை ஒன்றும் இல்லை !!! Says:
July 24, 2009 11:52 AM

கவுண்டர் : எனக்கு பாட்டு கேட்குற அளவுக்கு ஞானம் இல்லீங்க.. ஆனா அடிக்கடி வந்து போறேன்.. ஏன்னா உங்கள இன்னிலேருந்து விடாம துரத்தரேன் !!!////

ரொம்ப நன்றிங்க...அடிக்கடி வாங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://sirippupolice.blogspot.com/2009/07/blog-post_22.html

கார்த்தி said...

Nice review...
piya piya will be massive hit.
Again vijay antony rockssssss!!!

Post a Comment