மோதி விளையாடு - திரை விமர்சனம்

"நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு ஆக்‌ஷன் படத்தை பார்த்த திருப்தி."

"நல்ல கதையம்சம் உள்ள படம்."

"அடுத்தடுத்து என்ன நடக்கின்றது என்பதனை யூகிக்க முடியாத திரைக்கதை."

"கேட்க இனிமையான பாடல்கள்."


இப்படி சொல்லிக் கொண்டே போக ஆசைதான். ஆனால் படத்தில் எதுவுமே இல்லை.காதல்

மன்னன்,ஜெமினி போன்ற “அட்டகாசமானபடஙகளை கொடுத்து “அமர்களப்படுத்திய சரண் தான் இந்த படத்தை எடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை.

கதை இதுதான்.

ஐம்பதாயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொண்ட பண முதலையான கலாபவன் மணிக்கு இரண்டு மகன்கள்.சேர்த்த சொத்துக்கள் எல்லாம் குறுக்கு வழியிலும் அடுத்தவர்களை துன்புருத்தியும் பெறப்பட்டவையகும். இரு மகன்களில் ஒருவர் சொந்த மகன் வினய். மற்றொருவர் வளர்ப்பு மகன் புது முகம் "X"(யார்னு தெர்லப்பா :)). . இருவரிடமும் பாசத்தை கொட்டி வளர்க்கிறார் மணி. இவரின் அட்டகாசங்கலை பொறுக்கமுடியாத தொழில் எதிரிகள் இவரை பழி வாங்க எண்ணி இவரின் மகனை போட்டுத்தள்ள முடிவெடுக்கின்றனர்.

நிற்க,


இதற்கு இடையே life ஐ ஜாலி பண்ணிக்கொண்டிருக்கின்றனர் வினய் யும் மற்றொரு மகனும். விஸ் காம் மாணவியான ஹீரோயின் காஜல் அகர்வால் வீசும் குளிர்பான பாட்டில் வினயின் தலையில் பட்டு ஃபெராரி கார் அக்சிடெண்ட் ஆகி மூன்று லட்சம் வரை செலவாகிறது. இதனை கழிக்க வேலைக்காரியாக வினயின் வீட்டில் இருக்க நேரிடுகிறது(ஜாலிக்காக).

காஜலின் அழகில் மயங்கி வினயும்,இன்னொரு மகனும் காதலிக்க ஆரம்பிக்க இருவரில் சொந்த மகன் வினய்க்கு வைத்த குறியில் அனாதை மகன் இறந்து விடுகிறார். அத்துடன் எப்படா விடுவாய்ங்க என எதிர்பார்த்த இடைவேளையும் வந்து விடுகிறது.


அழகாக/எதிர்பார்ப்பை தூண்ட கூடிய வகையில் இருக்க வேண்டும் என இயக்குனர் முயற்சி செய்யவே இல்லை என்பதை முதல் பாதி நமக்கு தெளிவாக உணர்த்தி விடுகிறது. அந்த அளவிற்கு முதல் பாதி மொக்கை.சில இடஙகளில் சந்தானம் சிரிக்க வைத்தாலும் மற்றவர்களின் மொக்கை முன் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


சரி இரண்டாம் பாதியில் எதாவது பண்ணியிருப்பார்கள் என்றால்,ம்ஹூம். அனாதை மகன் இறந்த பின் வினய்க்கு இருந்த உரிமைகள் எல்லாம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது.என்னவென்று பார்தால் வினய்தான் அனாதயாம். இறந்தவன் உண்மையான மகனாம். இந்த சப்பையான சஸ்பென்சை வைத்துக் கொண்டு சரண் நம்மை இந்த அளவிற்கு சோதித்திருக்க வேண்டாம்.


கதைதான் கொடுமையென்றால் வினயின் பின்னனிக்குரல் அதை விட கொடுமை. இதில் காமெடியென்னவென்றால் இவரின் கம்பெனி CEO வான வட நாட்டு சிங் இவரை விட தமிழ் நன்றாக பேசுகிறார்.

ஹரிஹரன் தமிழில் இசை அமைத்துள்ள முதல் படம்.மோதி விளையாடு...மோதி விளையாடுபாடல் மட்டும் ஒ.கே ரகம்.கேட்கலாம்.


உங்கள் நண்பர் எவரையெனும் பழி வாங்க நினைத்தால் இந்த படத்தின் டிக்கட்டை தாராளமாக கொடுக்கலாம். காஜல் அகர்வால் அழகாக இருக்கிறார். ம்ம்ம்...அவருக்காக மட்டும் போய் மொக்கை வாங்கி திரும்ப வேண்டாம்.


அப்ப இதே சரண் இயக்கும் தல யோட “அசல்படத்தோட கதி?


மொத்ததில் ஆ.வி அல்லது குமுதம் விமர்சனத்தில் கீழ்கண்டவாறு வந்தால் ஆச்சர்ய பட வேண்டாம்.


மோதி விளையாடு மொக்கை விளையாட்டு


பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருந்தால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில்ஓட்டை பதியுங்கள். நன்றி...



33 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

மோதி விளையாடு - விமர்சனம் -சரணின் வெற்றி முத்திரை


இளைய சமுதாயத்தை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமேஇல்லை . ஒப்பனிங் குத்து பாடல் , ஓவர் பில்ட் அப், செண்டிமெண்ட் இல்லாமல் நீண்ட நாளைக்கு பிறகு நல்ல படம்

நன்றி சம்பத் நான் காசி தியேட்டரில் பார்க்க சென்றபோது கூட சிலர் அப்படிதான் கூறினார்கள் . உண்மையில் நல்ல பொழுதுபோக்கான படம் . நல்ல படத்தை விமர்சனத்தால் வீணடிக்ககூடாது என்பதற்காகவே நான் விமர்சனம் எழுதினேன் . மற்றபடி உங்களை புண்படுத்த அல்ல நண்பரே

ஸ்ரீ.கிருஷ்ணா said...

இதை படித்து பாருங்கள்

இந்திய வல்லரசும் சுவிஸ் வங்கி கருப்பு பணமும்


http://saidapet2009.blogspot.com/2009/07/blog-post

சம்பத் said...

நன்றி கிருஷ்ணா...
அடிக்கடி வாங்க...சில இடங்களில் சிரிக்க முடிகிறது..ஆனாலும் என்னால் திரைக்கதையை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

அதுவும் வினய்யின் சொந்த குரல் உண்மையிலேயே எரிச்சல்...

அசலுக்காக காத்திருப்போம். சரண் நல்ல படத்தை தருவார் என நம்புவோம்.

சம்பத் said...

///krishna Says:
July 24, 2009 2:39 PM

இதை படித்து பாருங்கள்

இந்திய வல்லரசும் சுவிஸ் வங்கி கருப்பு பணமும்


http://saidapet2009.blogspot.com/2009/07/blog-post

///

கண்டிப்பாக....

Anonymous said...

படத்தை பார்க்கலாமா வேண்டாமா?

சம்பத் said...

////Anonymous Says:
July 24, 2009 2:43 PM

படத்தை பார்க்கலாமா வேண்டாமா?////

பதிவை பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள் நண்பா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல வேலை நான் படமெல்லாம் பாக்குறது இல்லை !!!

Anonymous said...

சரண் காக இந்த படம் பாக்கலாம்னு இருந்தேன்..நல்ல வேலை பதிவு போடுறீங்க இல்ல இன்னிக்கி சாயங்காலம் வேஸ்ட் ஆகிருக்கும்..BTW அசல் (அஜித் மூவி) லேர்ந்து சரணை தூக்கிட்டு வெங்கட் பிரபுவ போட போறதா எதோ ஒரு தளத்தில் படித்த நியாபகம்..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

சம்பத் said...

////குறை ஒன்றும் இல்லை !!! Says:
July 24, 2009 3:08 PM

நல்ல வேலை நான் படமெல்லாம் பாக்குறது இல்லை !!!////

இப்படியெல்லாம் எஸ்கேப் அயிர்ராங்களா? ம்ம்ம்...நடக்கட்டும்...

சம்பத் said...

///Ammu Madhu Says:
July 24, 2009 3:20 PM

சரண் காக இந்த படம் பாக்கலாம்னு இருந்தேன்..நல்ல வேலை பதிவு போடுறீங்க இல்ல இன்னிக்கி சாயங்காலம் வேஸ்ட் ஆகிருக்கும்..BTW அசல் (அஜித் மூவி) லேர்ந்து சரணை தூக்கிட்டு வெங்கட் பிரபுவ போட போறதா எதோ ஒரு தளத்தில் படித்த நியாபகம்..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com//


வருகைக்கு நன்றி அம்மு... we will hope to see ASAL movie as a DIWALI treat...

சரவணகுமரன் said...

இன்னுமா சரணை நம்புறீங்க?

விமர்சனத்திற்கு நன்றி, சம்பத்

சம்பத் said...

///
சரவணகுமரன் Says:
July 24, 2009 4:57 PM

இன்னுமா சரணை நம்புறீங்க?

விமர்சனத்திற்கு நன்றி, சம்பத்///

:)

முதல் வருகைக்கு நன்றி சரண்..(சரவணகுமரன்) :))...அடிக்கடி வாங்க...

kanavugalkalam said...

உங்களை நம்பி தான் தலயின் "அசல்" படம் இருக்கு பார்த்து........................

சம்பத் said...

///உங்களை நம்பி தான் தலயின் "அசல்" படம் இருக்கு பார்த்து........................///

வருகைக்கு நன்றி...

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்..:-)))

சம்பத் said...

///
கார்த்திகைப் பாண்டியன் Says:
July 25, 2009 2:14 AM

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்..:-)))
////

இப்ப உண்மையாகவே புரியுது நண்பா உங்க கஷ்டம்....எத்தனை டைம் காதுல ரத்தம் வர தியேட்டர் வெளியே வந்திருப்பீங்க... :(
வருகைக்கு நன்றி நண்பா....

கலையரசன் said...

அப்ப அடுத்த தடவை டபுள் மொக்கையை எதிர்பார்கலாம்..
50 திர்கம்ஸ் மிச்சம்.. நன்றி சொல்லவே உனக்கு என் நண்பா வார்தையில்லையயயேய!!

சம்பத் said...

///கலையரசன் Says:
July 25, 2009 2:26 AM

அப்ப அடுத்த தடவை டபுள் மொக்கையை எதிர்பார்கலாம்..
50 திர்கம்ஸ் மிச்சம்.. நன்றி சொல்லவே உனக்கு என் நண்பா வார்தையில்லையயயேய!!////

தல படம் நல்லாயிருக்க வேண்டுவோம்...சரண்+அஜித் இப்ப வரைக்கும் ஊத்திக்கிட்டதில்லை...ம்ம்...பார்ப்போம்...

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

போட்டோ நல்லயிருக்கு நைனா..!

சம்பத் said...

///தமிழ் வெங்கட் Says:
July 25, 2009 3:28 AM

போட்டோ நல்லயிருக்கு நைனா..!///

அத பாத்துதான் ஏமாந்துட்டோம்... :)
முதல் வருகைக்கு நன்றி வெங்கட்...

Cable சங்கர் said...

நல்ல விமர்சனம். சம்பத்

சம்பத் said...

///
Cable Sankar Says:
July 25, 2009 7:33 AM

நல்ல விமர்சனம். சம்பத்///

தங்கள் வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி கேபிளாரே...

Suresh said...

படம் செம்ம மொக்கை தலைவா ஒருத்தர் சூப்பர்னு சொல்லி விமர்சனம் போட்டத்தை பார்த்து நானும் என் மனைவியும் போய் எங்க மனைவி இதை போய் யாருப்பா அது சூப்பர்னு சொன்னது அடிக்காத குறை தான் நீங்க கரெக்ட்டா சொல்லி இருக்கிங்க

அந்த டிஸ்ட்டும் முன்னாடியே யூகிச்சத்தது அதனால் படம் ஒட்டவில்லை

Suresh said...

/கதைதான் கொடுமையென்றால் வினயின் பின்னனிக்குரல் அதை விட கொடுமை. இதில் காமெடியென்னவென்றால் இவரின் கம்பெனி CEO வான வட நாட்டு சிங் இவரை விட தமிழ் நன்றாக பேசுகிறார்.

ஹரிஹரன் தமிழில் இசை அமைத்துள்ள முதல் படம்.”மோதி விளையாடு...மோதி விளையாடு” பாடல் மட்டும் ஒ.கே ரகம்.கேட்கலாம்.

/

மிக சரி ஹீ ஹீ

சம்பத் said...

////Suresh Says:
July 27, 2009 5:02 PM

படம் செம்ம மொக்கை தலைவா ஒருத்தர் சூப்பர்னு சொல்லி விமர்சனம் போட்டத்தை பார்த்து நானும் என் மனைவியும் போய் எங்க மனைவி இதை போய் யாருப்பா அது சூப்பர்னு சொன்னது அடிக்காத குறை தான் நீங்க கரெக்ட்டா சொல்லி இருக்கிங்க

அந்த டிஸ்ட்டும் முன்னாடியே யூகிச்சத்தது அதனால் படம் ஒட்டவில்லை///

சரியாய் சொன்னீங்க சுரேஷ்....

சம்பத் said...

////Suresh Says:
July 27, 2009 5:03 PM

/கதைதான் கொடுமையென்றால் வினயின் பின்னனிக்குரல் அதை விட கொடுமை. இதில் காமெடியென்னவென்றால் இவரின் கம்பெனி CEO வான வட நாட்டு சிங் இவரை விட தமிழ் நன்றாக பேசுகிறார்.

ஹரிஹரன் தமிழில் இசை அமைத்துள்ள முதல் படம்.”மோதி விளையாடு...மோதி விளையாடு” பாடல் மட்டும் ஒ.கே ரகம்.கேட்கலாம்.

/

மிக சரி ஹீ ஹீ////

கடைக்கு அடிக்கடி வாங்க ...ஹி ஹி

குறை ஒன்றும் இல்லை !!! said...

எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்....
http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_28.html

Anonymous said...

எனக்கு கிடைத்த விருது குறித்து தங்களின் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி சம்பத்..அப்டியே நேரம் கிடைக்கும் பொழுது என் ரெசிபியும் செய்து பாருங்கோ ..

அன்புள்ள,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

விக்னேஷ்வரி said...

முதல் பாரா படித்து வந்த மகிழ்ச்சி, முழுதும் படித்து மொத்தமாய்ப் போனது. நல்ல போரடிக்காத விமர்சனம் சம்பத்.

சம்பத் said...

///
விக்னேஷ்வரி Says:
July 30, 2009 2:18 AM

முதல் பாரா படித்து வந்த மகிழ்ச்சி, முழுதும் படித்து மொத்தமாய்ப் போனது. நல்ல போரடிக்காத விமர்சனம் சம்பத்.////

ரொம்ப நன்றிங்க...

வழிப்போக்கன் said...

கலக்கல் விமர்சனம்...

சம்பத் said...

////வழிப்போக்கன் Says:
August 16, 2009 9:41 AM

கலக்கல் விமர்சனம்...////

Thanks வழிப்போக்கன்

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

லட்சம் வார்த்தைகள் - இந்தப் பாடல் என்னைக் கவர்ந்த ஒன்று - அது இந்தப் படத்தில் இடம் பெற்றது..

Post a Comment