பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்க கூடாத பத்து கேள்விகள்

வலைப்பதிவுலகில் உள்ள பதிவர்களில் 10 கேள்விகள் கேட்காத ஆட்களே இல்லை. மீதமுள்ளோர் யார் என்று பார்த்தால் பத்தாம் வகுப்பு மாணவர்களும்,பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் மட்டுமே... ("ப"வுக்கு "பா". :-) ). எனவே 1998 பத்தாம் வகுப்பில் படித்ததை ரூம் போட்டு யோசித்ததில் உதித்தவைகள் இவைகள்...

இந்த 10 கேள்விகள் கான்செப்ட்டை ஆரம்பித்தவர் பொறுத்தருள்க...1) சிவப்பு பாஸ்பரஸிர்கும்,வெண் பாஸ்பரஸிர்கும் உள்ள வேற்றுமைகள் என்ன?
2) நாலடியார் குறிப்பு வரைக
3) உங்கள் ஊரில் உள்ள குடிநீர் பிரச்சினையை போக்க உங்கள் மாவட்ட கலெக்டருக்கு மடல் வரைக..
4) நீ முதலமைச்சராக வந்தால் என்னன்ன செய்வாய் என கற்பனை கட்டுரை வரைக...
5) "அகர" என தொடங்கும் திருக்குறளை அடி பிறளாமல் எழுதுக.
6) "சேக்கிழார்,சீத்தலை சாத்தனார்" பற்றி குறிப்பு வரைக.
7) இரட்டை கிளவி மற்றும் அடுக்குதொடர் - வேறுபாடுகளை கூறு.
8) வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன?
9) மழை எவ்வாறு பொழிகிறது?
10) சிறுநீரகத்தின் படம் வரைந்து பாகம் குறி..


பதிவு பிடித்திருந்தால் தமிழிஷில் ஓட்டளியுங்கள். மேலும் நீங்களும் கேள்விகளை சேர்க்கலாம். :)

2 comments:

லோகு said...

சார், 1998 ல பத்தாம் வகுப்புல அகர முதல் எழுத்தெல்லாம் சொல்லி கொடுத்தாங்களா..
நீங்க ரூம் போட்டு ரொம்ப யோசிச்சு பத்தாம் வகுப்புக்கு பதிலா 5 ஆம் வகுப்பு கேள்வி கேட்டுடீங்க...

சம்பத் said...

///லோகு said...

சார், 1998 ல பத்தாம் வகுப்புல அகர முதல் எழுத்தெல்லாம் சொல்லி கொடுத்தாங்களா..
நீங்க ரூம் போட்டு ரொம்ப யோசிச்சு பத்தாம் வகுப்புக்கு பதிலா 5 ஆம் வகுப்பு கேள்வி கேட்டுடீங்க...///

நன்றி லோகு... இப்ப சொல்லுங்க.. எனக்கு தமிழ் படம் எடுக்க தகுதி இருக்கு அல்லவா ? :)

Post a Comment