இதுதான் உங்கள் பாஸ்வோர்ட்டா? ஜாக்கிரதை

பொதுவா நம்ம ஆட்கள் புதிதாக மெயில் ஐ.டி க்ரியேட் பண்ணும் போது பாஸ்வோர்ட்டாக "123456" வைப்பது வழக்கம். ஆறு டிஜிட் ஏன் என்றால் அனைத்து மெயில் சர்வர்களும் குறைந்த பட்சம் 6 எழுத்துக்களை கண்டிப்பாக வைக்கவேண்டும் என்று சொல்வதுதான். மேலும் இதுதான் உலகத்திலேயே மோசமான பாஸ்வோர்ட் என வல்லுனர்கள் கணித்துள்ளார்கள். இரண்டாவதாக நம் மக்கள் அதிகம் பயன்படுத்துவது "password" என்பதாகும். இதே போல் "qwerty" (கீ போர்டில் உள்ள முதல் ஆறு ஆங்கில எழுத்துக்கள்), abc123, letmein,monkey,myspace1,password1 மற்றும் blink182 போன்றவைகள் PC Magazine நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.இதில காமெடி என்னவென்றால் மேலேயுள்ள அனைத்தும் பொதுவாக உலக மக்கள் மனதில் உள்ள வார்த்தைகள் போல தோன்றினாலும் கீழேயுள்ள லிஸ்ட் சுவராஸ்யமாக உள்ளது. ncc1701(விண்வெளி ஊர்தி ஒன்றின் பெயர்),thx1138,qazwsx(கீ போர்டு முதல் மற்றும் இரண்டாம் வரிசைகள் ),666666(ஆறு ஆறுகள்),7777777(ஏழு ஏழுகள்) போன்றனவும் பொதுவான பாஸ்வர்டாக பயன்படுத்துவது எல்லாரும் ஒரே மாதிரி சிந்திப்பதையே கட்டுகிறது. கொரியர் மெயில் தளம் "batman", "bond007" மற்றும் "cocacola" போன்றவைகளும் அதிகமாக புழக்கத்தில் உள்ள கடவுச்சொல்லாக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் டாப் 100 மோசமான பாஸ்வர்டுகளுக்கு இங்கே சொடுக்கவும்.

எப்படி
பாதுகாப்பான பாஸ்வர்டுகளை உருவாக்குவது?


1) எந்த சூழ்நிலையிலும் அகராதியிலுள்ள (dictionary) வார்த்தைகளை பாஸ்வர்டாக பயன்படுத்தக்கூடாது. ஹேக்கர்கள் இதன் மூலமே ஹேக் செய்வார்கள்.

2) பாஸ்வர்ட் அமைக்கும் பொது ஷிப்ட் கீக்களை பயன்படுத்தி காபிடல் லெட்டர்களை பயன்படுத்த வேண்டும்.
3) நாம் அமைக்கும் ரகசிய சொல்லில் ஸ்பெஷல் கேரக்டர் இருக்குமாறு வைக்க வேண்டும்.
4) நமது பெயரின் ஒருபகுதியோ அல்லது மகன்/மகள் பெயர்களையோ வைக்க கூடாது.
5) குறைந்த பட்சம் 60 நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வோர்டை மாற்றுவது நல்லது. மேலும் சில டிப்ஸ் நீங்கள் அமைத்த பாஸ்வர்ட் பாதுகாப்பானதா என அறிய இங்கே சொடுக்கவும்.


கொசுறு
செய்தி:
இணையம் பயன்படுத்தும் மக்களில் 61% பேர்கள் ஒரே யூசர் நேம் மற்றும் பாஸ்வர்ட்களை வேறுவேறு தளங்களுக்கு பயன்படுத்துகின்றனர். அதில் நீங்களும் ஒருவர்தானே :)

தமிழிஷில் ஓட்டளிக்க...

13 comments:

அன்புடன் அருணா said...

மிக நல்ல பதிவு...
அன்புடன் அருணா

சம்பத் said...

//அன்புடன் அருணா said...

மிக நல்ல பதிவு...
அன்புடன் அருணா//

மிக்க நன்றி அருணா...தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்...

ரங்கன் said...

நல்ல பதிவு.
மிக்க நன்றி.

வாழ்த்துக்கள்!!

சம்பத் said...

//ரங்கன் said...

நல்ல பதிவு.
மிக்க நன்றி.

வாழ்த்துக்கள்!!///

நன்றி ரங்கன்...

Mrs.Menagasathia said...

மிக நல்ல தகவல்!!

சம்பத் said...

//Mrs.Menagasathia said...

மிக நல்ல தகவல்!!///

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Subramania Athithan said...

thanks for d info :)

சம்பத் said...

//Subramania Athithan said...

thanks for d info :)///

வருகைக்கு நன்றி.....

லோகு said...

உபயோகமான பதிவுங்க..

நான் அடிக்கடி Password மாற்றும் பழ்க்கம் உள்ளவன்..

எனது முந்தைய சில Password கள்..

dairymilk, squaredrive, straightdrive, nethurathiri, fulltoss......

சம்பத் said...

///லோகு said...

உபயோகமான பதிவுங்க..

நான் அடிக்கடி Password மாற்றும் பழ்க்கம் உள்ளவன்..

எனது முந்தைய சில Password கள்..

dairymilk, squaredrive, straightdrive, nethurathiri, fulltoss......//

நன்றி லோகு..அடிக்கடி பாஸ்வர்ட் மாற்றுவது நல்லது... அதென்னங்க பாஸ்வர்ட் "nethurathiri" :-)

லோகு said...

"nethurathiri" = Nethu rathiri yamma paattu kekkum pothu thonuchu...

சம்பத் said...

///லோகு said...

"nethurathiri" = Nethu rathiri yamma paattu kekkum pothu thonuchu...///


ஹா ஹா... எனது பழைய பாஸ்வர்டு கூட "NanGod#09". அதாவது நான் கடவுள் 2009. இது எப்படி இருக்கு .. :-)

Post a Comment