ஐ பி எல் போட்டிகளை புறக்கணிப்போம்!

இன்று நடந்த இந்தியன் கிரிக்கெட் போர்டு கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை இங்கிலாந்திலோ அல்லது தென்னப்பிரிக்கவிலோ நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவு உண்மையாகவே என் போன்ற பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களை இந்திய கிரிக்கெட் புன்படுத்தியுள்ளதகவே கருதுகிறேன்.


இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த லலித்மோடி மற்றும் ஷஷாங் மனோகர், மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க மறுப்பதலே வெளிநாடுகளில் போட்டிகளை நடத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

தமிழர்கள் இலங்கையில் செத்துக்கொண்டிருந்த வேலையில் நம் கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பி அழகு பார்த்ததுதான் நம் கிரிக்கெட் போர்டு.

அவர்களை பொறுத்தவரையில் எங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்தினாலும் நம் மக்கள் டி வியில் பார்த்துக்கொள்வார்கள். அதன் மூலம் நமக்கு லாபம் கிடைக்கும் என எண்ணுகிறார்கள்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் கேள்விகள் இவைகள் தான்.

1) இங்கு தேர்தல் நடக்கிறது என்பதால் வெளிநாடுகளில் கிரிக்கெட் நடத்தும் நம் புண்ணியவான்கள் எப்படி வாக்களிக்களித்து தனது ஜனநாயக கடமைகளை நிறைவேத்த போகிறார்கள்?
2) IPL போட்டிகளை இந்த சீசனில் கட்டாயமாக நடத்தியே தீர வேண்டுமா? (போன தடவை எனக்கு தெரிந்த ஒருவர் தனது பத்தாவது படிக்கும் மகன் IPL போட்டிகளை பார்த்தே மார்க் குறைந்ததாக கூறி வருத்தப்பட்டார்.)
3) இப்படி அவசரஅவசரமாக நடத்துவதற்கு பதிலாக கொஞ்ச நாட்கள் கழித்து நடத்தினால் என்ன? (என்னதான் ஷெட்யூல் இல்லையென்றாலும் BCCI தனது power-ஐ பயன்படுத்தி)
4)ஏற்கனவே பாகிஸ்தான் போல இந்தியா வந்து விளையாட அச்சம் தெரிவிக்கும் வேளையில் நம் ஆட்களே வெளிநாடுகளில் நமது போட்டிகளை நடத்துவது அவமானமில்லையா?
5) ஐ.பி.எல் லின் இந்த முடிவுக்கு எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்க தயங்கும் நம் அரசை என்ன சொல்வது?


எனவே இந்த ஐ பி எல் போட்டிகளை புறக்கணித்து நம் நாட்டில் உள்ள பண வெறியர்களான இந்திய கிரிகெட் போர்டு,ஷாருக், ப்ரீதிஜிண்டா மற்றும் விஜய் மல்லையா போன்றோருக்கு பாடம் புகட்டுவோம்.

கொசுறு:
கடந்த முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கு அதரவு திரட்ட அழைக்கப்பட்ட "ஏய் சைலன்ஸ்" புகழ் விஜய் அழைக்கப்படுவாரா என்பதே அனைவரின் கேள்வி..

தமிழிஷில் ஓட்டளிக்க:

10 comments:

Anonymous said...

//கொசுறு:
கடந்த முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கு அதரவு திரட்ட அழைக்கப்பட்ட "ஏய் சைலன்ஸ்" புகழ் விஜய் அழைக்கப்படுவாரா என்பதே அனைவரின் கேள்வி..//

"ஏய் சைலன்ஸ்" அல்ல "டேய் சைலன்ஸ்"

dondu(#11168674346665545885) said...

இது சம்பந்தமாக நான் இட்ட பதிவைப் பார்க்க http://dondu.blogspot.com/2009/03/blog-post_22.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

epowerx said...

யாரெல்லாம் IPL ஓன‌ர்க‌ள்? பெரிய‌ industrialists ம‌ற்றும் Bollywood Actors. எல்லாருக்கும் political connection வேறு உண்டு.
Whatelse do you expect from the Govt? Stop being so naive. Grow up!

வண்ணத்துபூச்சியார் said...

எழுத்தாளர் மாலனின் IPL, Please get out!

இதையும் அனைவரும் படிக்கவும்.

http://jannal.blogspot.com/2009/03/ipl-please-get-out.html

சம்பத் said...

Anonymous said...

//கொசுறு:
கடந்த முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கு அதரவு திரட்ட அழைக்கப்பட்ட "ஏய் சைலன்ஸ்" புகழ் விஜய் அழைக்கப்படுவாரா என்பதே அனைவரின் கேள்வி..//

"ஏய் சைலன்ஸ்" அல்ல "டேய் சைலன்ஸ்"///

அடுத்த முறை திருத்திக்கொள்கிறேன் அனானி அவர்களே...வருகைக்கு நன்றி..

சம்பத் said...

///dondu(#11168674346665545885) said...

இது சம்பந்தமாக நான் இட்ட பதிவைப் பார்க்க http://dondu.blogspot.com/2009/03/blog-post_22.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
///

வருகைக்கு நன்றி டோண்டு சார்...உங்கள் பதிவை பார்த்து விட்டேன்...அருமை..

சம்பத் said...

///epowerx said...

யாரெல்லாம் IPL ஓன‌ர்க‌ள்? பெரிய‌ industrialists ம‌ற்றும் Bollywood Actors. எல்லாருக்கும் political connection வேறு உண்டு.
Whatelse do you expect from the Govt? Stop being so naive. Grow up!
///

Thanks to epowerx....

சம்பத் said...

///வண்ணத்துபூச்சியார் said...

எழுத்தாளர் மாலனின் IPL, Please get out!

இதையும் அனைவரும் படிக்கவும்.

http://jannal.blogspot.com/2009/03/ipl-please-get-out.html
///

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வண்ணத்துபூச்சி... மாலனின் பதிவு அருமை..பகிர்தமைக்கு நன்றி..

லோகு said...

எங்க நடந்தா என்னங்க.. போர், சிக்ஸ் அடிக்கும் போது பொண்ணுங்க ஆடுவாங்க தானே???
அப்படினா நா புறக்கணிக்க மாட்ட,,
:) :)

Jokes apart... நல்ல பதிவு...

விஜய்?? சென்னை, செமி பைனல் ல தோத்து பைனல் விளையாடும் போது???? வருவார்..

சம்பத் said...

///லோகு said...

எங்க நடந்தா என்னங்க.. போர், சிக்ஸ் அடிக்கும் போது பொண்ணுங்க ஆடுவாங்க தானே???
அப்படினா நா புறக்கணிக்க மாட்ட,,
:) :)

Jokes apart... நல்ல பதிவு...

விஜய்?? சென்னை, செமி பைனல் ல தோத்து பைனல் விளையாடும் போது???? வருவார்..
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லோகு... விஜயை விடமாட்டிங்க போல.. :)

Post a Comment